Show all

அமெரிக்காவில் தமிழர்கள் ஆர்பாட்டம்! துப்பாக்கிச்சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும்

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி பொது மக்கள் படுகொலைக்கு எதிராகவும், வேதாந்தா தாமிர உருக்காலையை மூடக் கோரியும் உலகெங்கிலும் போராட்டம் நடந்து வருகின்றன.

லண்டனில் நடந்த போராட்டத்தை தொடர்ந்து வேதாந்தா நிறுவனத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவிலும் இது போன்ற போராட்டங்கள் பல நகரங்களில் நடைபெற்று வருகின்றன.

சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் சுமார் 200 பேர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும், பொதுமக்கள் படுகொலைக்கு நியாயம் கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் முடிவில் மக்கள் கையெழுத்திட்ட மனுவை இந்திய தூதரக அதிகாரி திரு.வெங்கட் அவர்களிடம் அளிக்கப்பட்டது. மக்களின் உணர்வுகளை இந்திய அரசுக்கு தெரிவிப்போம் என்று அவர் உறுதி அளித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,800.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.