Show all

உலகில் எங்கு ஓட்டப்பந்தயம் நடந்தாலும் கலந்து கொள்ளும் தமிழக இளைஞர்! இவருக்கு அகவை தற்போது ஐம்பத்தொன்பது

29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமது அறுபதாவது அகவைக்குள் 100வது ஓட்டப் போட்டியை நோக்கிச் செல்ல முனைகிறார் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) சைதாப் பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சென்னையின் முன்னாள் மேயருமான மா.சுப்பிர மணியன். 

கடந்த நான்கு ஆண்டுகளில் பல பந்தயங்களில் ஓடிய அவர் இம்மாதம் சிங்கப்பூரில் நடந்த சிங்கப்பூர் ஏக்ஷன் ஆசியா 50 ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றார். 21 கிலோ மீட்டர் தூரம் ஓடியதோடு தனது 87ஆவது ஓட்டத்தினை வெற்றிகரமாக முடித் தார் திரு சுப்பிரமணியன். இவர் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம் பிடித்ததுடன் பல பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் நடைபெற்ற ஓட்டப் போட்டியில் முதன்முறையாக பங்கெடுத்ததை அடுத்து இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மட்டு மல்லாது, ஆஸ்திரேலியா, கத்தார் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போட்டி களிலும் அவர் கலந்துகொண்டார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட திரு சுப்பிரமணியனுக்கு ஒரு கொள்கலன் கனரக வாகனம் மோதிய விபத்தில் வலது கால் மூட்டு நான்கைந்து துண்டுகளாக நொறுங்கியதால் தமக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கடுமையான உடற் பயிற்சிகளில் ஈடுபடக்கூடாது என்று ஆலோசனை கூறினர். அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு மாத காலம் வீட்டில் உடற் பயிற்சிச் சிகிச்சை செய்து வந்த திரு சுப்பிரமணியன், தம்முடைய நிலைமையை நினைத்து மனந்தளராமல் ஓகப் பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கி, தற்போது மெதுநடை, ஓட்டப் போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.

தம்முடைய உடல் நலப் பிரச்சினைகளை ஒரு தடையாக எண்ணாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் திரு சுப்பிரமணியன் 1200க்கு மேற்பட்டோருடன் சிங்கப்பூரில் நடைபெற்ற ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட திரு சுப்பிரமணியன் இதனைத் தொடந்து சண்டிகார், லக்னோ ஆகிய இடங்களில் நடை பெறவிருக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள ஆயத்தமாகி வருகிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,941.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.