Show all

ஓர் அலசல்! புலம்பெயர் மண்ணில் அடாவடி காட்டும் வடமாநிலத்தவர்- புலம்பெயர் மண்ணின் அடையாளமேற்கும் தமிழர்

வாழ்வாதாரத்திற்காக புலம்பெயர்தல் என்பது உலகம் முழுவதும் உள்ள நடைமுறையே. உலகநாடுகள் அனைத்தும் புலம்பெயர்கிறவர்களுக்கு தனிஅடையாளம் பேணுகின்றன. வந்த நாட்டு அடையாளம் வேண்டும் என்பவர்களுக்கு பல நிபந்தனைகள் விதிக்கின்றன. நிபந்தனையேற்று வந்தநாட்டு அடையாளம் பேணுவதில் தமிழர் முதன்மையில்.

16,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: கொரோனா அச்சத்தில், உலகம் முழுவதும், புலம்பெயர்வுகளுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட போது, ஒரேயொரு கூட்டம் மட்டும் கையில் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு, குழந்தைகளைத் தோளிலும், கைகளில் மூட்டை முடிச்சுகளையும் சுமந்துகொண்டு கொளுத்திப் பொசுக்கிய கோடை வெப்பத்தில் இளகிய தார்ச்சாலைகளிலும், தொடர்வண்டி தண்டவாளங்களிலும் கூட்டம் கூட்டமாய் சொந்த ஊர் நோக்கி திரும்பிக்கொண்டிருந்தது. 

கொரோனா குறுவியின் அச்சுறுத்தல், காவல் துறையின் கட்டுப்பாடுகள், ஒன்றிய, மாநில அரசுகளின் உத்தரவு என எதுவும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள்தான் வடஇந்தியத்தாயக புலம்பெயர் தொழிலாளர்கள்.

தற்போது கொரோனா முடிவுக்கு வந்த நிலையில்- வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ்நாடு வந்து, மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கான வானுயர்ந்த கட்டடங்களின் கட்டுமானப் பணிகளிலும், ஆட்கள் கிடைக்காத வேளாண் பணிகளிலும், ஆபத்து நிறைந்த ஆலைப் பணிகளிலும், பின்னலாடை உள்ளிட்ட தொழிற்சாலைகளிலும், செங்கல் சூளைகளிலும், உணவகங்களிலும், தேநீர் கடைகளிலும், முடித்திருத்த நிலையங்களிலும், வணிக வளாகங்களிலும் மாத ஊதியத்திற்காகவும் தினக்கூலிகளாகவும் வந்து குவியத்தொடங்கியுள்ளனர் 'வட மாநிலத் தொழிலாளர்கள்'.

தமிழ்நாட்டில்தானே நமக்கான பிழைப்பு நடக்கிறது. தமிழ் கற்றுக்கொள்வோம் என்று, இந்தக் கூட்டம் ஒருபோதும் முனைவதில்லை. ஹிந்தியும் சொந்த மாநிலமொழியும் பேசமட்டும் தெரிந்த இந்தக் கூட்டம் ராஷ்டிர பாஷா ஹிந்தி தங்களுக்குத் தெரியும் என்று பீற்றிக்கொள்ளும். 

விடுதலை பெற்ற இந்தியாவில் கடந்த எழுபத்தி ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ், பாஜக கட்சியிலும், ஒன்றிய ஆட்சியிலும், அறங்கூற்று மன்றங்கள், வருமானவரித்துறை, தொடர்வண்டித்துறை, உள்ளிட்ட ஒன்றிய ஆட்சிப்பணிகள் அனைத்திலும் அதிகாரம் இனம் தங்களுடைய என்கிற பெருமைக்குரியது இந்தக் கூட்டம்.  

இந்த நிலையில்தான் கடந்த மாதத்தில், திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே திலகர் நகரில் வட மாநில தொழிலாளர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளரை தாக்குவதாக காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் தீயானது. 

அதேபோல், அண்மையில், சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை விரைவுத் தொடர்வண்டியில் கூட்டமாக செல்லும் வட மாநிலத் தொழிலாளர்கள் உள்ளூர் தமிழர் ஒருவரைத் தாக்கும் காணொளி தீயானது. இந்த அடவடியில்  தாக்குதல் நடத்தியதில் ஒருவரை மட்டும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த ஆள், கோயம்பேடு சந்தையில் கூலி வேலை செய்பவர் என்று தெரிய வந்தது. 

தமிழர்களும் கூட வளைகுடா நாடுகள், தென்னாப்பிரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கின்றனர். ஆனால் அவர்களின் அடையாளம் பிரபாகரன் தலையெடுப்பதற்கு முன்புவரை ஹிந்தி, ஹிந்து, பாரத் ஆக இருந்தது. 

தற்போது- ஹிந்தி, ஹிந்து, பாரத் அடையாளம் உள்ள இவன் புலால் மறுக்கிறான்! அதே அடையாளத்தோடு வந்துள்ள நீங்கள் புலால் உண்கின்றீர்கள்! அப்ப நீங்கள்? ஓ! பிரபாகரன் தமிழா? என்று தமிழனை உலகினர் அடையாளம் காணத் தொடங்கியிருக்கின்றனர். ஆனாலும் என்ன செய்ய தமிழனுக்கான அடையாளத்தைத தமிழீழம் தந்துவிடக் கூடாது என்பதற்காக்;...   

விடுதலை பெற்ற இந்தியாவில் கடந்த எழுபத்தி ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ், பாஜக கட்சியிலும், ஒன்றிய ஆட்சியிலும், அறங்கூற்று மன்றங்கள், வருமானவரித்துறை, தொடர்வண்டித்துறை, உள்ளிட்ட ஒன்றிய ஆட்சிப்பணிகள் அனைத்திலும் அதிகாரம் இனம் இலங்கையில் ஒன்னரை இலட்சம் தமிழர்களையும் போராளிகளையும் அழிப்பதில் முதன்மை காட்டியதை, சிங்களப் பேரினவாதிகள் இன்றுவரை பாராட்டி மகிழ்கின்றார்களே. தமிழ்பேசும் இந்திய மீனவர்களை தமிழ்நாட்டு மீனவர் என்றுதானே சிங்கள இனம் அத்துமீறுகிறது. இந்திய ஆட்சியினமும் பாராமுகமாய் இருக்கிறது.

சென்னையில் மட்டும் ஏறக்குறைய 40 விழுக்காடு வடமாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர் என்று தெரியவருகிறது. சொந்த மண்ணில் வைத்து அவர்களுக்கு கல்வியும் வாழ்மானங்களும் வழங்க முன்வராமல், அவர்களுக்கு தமிழ்நாட்டின் வருவாயில் அரிசி பெற்றுத்தரும் வகைக்கு ஒரேநாடு ஒரேநாடு குடும்ப அட்டையை முன்னெடுத்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

வாழ்வாதாரத்திற்காக புலம்பெயர்தல் என்பது உலகம் முழுவதும் உள்ள நடைமுறையே. உலகநாடுகள் அனைத்தும் புலம்பெயர்கிறவர்களுக்கு தனிஅடையாளம் பேணுகின்றன. தங்கள் நாட்டு அடையாளம் வேண்டும் என்பவர்களுக்கு பல நிபந்தனைகள் விதிக்கின்றன. 

வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் புலம்பெயர்தலில் ஹிந்தி, ஹிந்து, பாரத் இனம் என்று ஒரு அடையாளம் இருக்கிறது. அதற்கு காரணம் இந்த இனத்தின் மேல்தட்டு மக்கள் இந்திய ஒன்றியத்தின் ஆட்சியில் இருக்கின்றனர். 

தமிழர்களும், உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்கள் நிருவாகக் கூலித்தளத்திலேயே பேரளாவில் ஈடுபட்டுள்ளனர். தமிழர்களுக்கு உலகின் எந்த நாட்டிலும் ஆட்சி அதிகாரமும் இல்லை. தன்னைமட்டும் நம்பும் உடல்உழைப்புக் கூலியாகவும் அவர்கள் இல்லை. அவர்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது எந்த நாட்டில் தமிழன் வாழ்கிறானோ, அந்த மண்ணின் மொழியில் புலமையும், அவன் பணியமர்ந்திருக்கும் மேலாண்மைக் கூலித்தளத்தில் புலமையும் பெற்றிருப்பது மட்டுமேயாகும். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,538 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.