Show all

திட்டங்களை பேசவேண்டும்; வன்முறை கூடாது! தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு ஐநாஅவை அதிகாரி வருத்தம்

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மக்கள் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுகளால் உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது என கூறி வந்தனர்.  இதனை தொடர்ந்து ஆலையைமூடக்கோரி அ.குமரெட்டியபுரம் உள்ளிட்ட 18 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் 100வது நாளன்று காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர்கள் பலியாகினர்.  70பேர்கள் காயமடைந்தனர்.

இந்நிலையில், ஐ.நா. அவையின் சுற்று சூழல் திட்ட தலைவர் எரிக் சோல்ஹெய்ம், மக்கள் போராட்டத்தில் 13 பேர்கள் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டிற்கு பலியானதற்கு தனது வருத்தத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்பொழுது, இதற்காக வருத்தம் அடைந்துள்ளேன்.  போராட்டம் வன்முறையாக மாறாமல் இருக்கும் என நம்பினேன்.  பலியோனோருக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.  அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.  இது நடந்திருக்க வேண்டாம்.

போராட்டங்கள் வன்முறையின்றி இருக்க வேண்டும்.  காவல்துறையினர் தனது வலிமையை பயன்படுத்த கூடாது.  இதனால் அதிகம் வருத்தம் ஏற்பட்டு உள்ளது.  இதற்கு தீர்வுகள் கிடைக்கும் என நம்பிக்கை கொள்கிறேன்.  திட்டங்களை அமல்படுத்தும் முன் மக்களிடம் பேச வேண்டும்.  இதுபோன்ற திட்டங்களுக்கு சுற்று சூழல் பாதுகாப்பு தேவையானது என்றும் அவர் வலியுறுத்தி கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,800. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.