Show all

கார்னெகி கார்பரேஷன் அமெரிக்க நிறுவன விருது பெறுகிறார் சுந்தர் பிச்சை

பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறி, அங்கு பல்வேறு துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு,

‘கார்னெகி கார்பரேஷன்’ என்ற நிறுவனம்,

‘சிறந்த குடியேறியவர்: அமெரிக்காவின் பெருமைக்குரியவர்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது.

 

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுகளுக்கு 30 நாடுகளை சேர்ந்த 42 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பி.பி.எஸ். தொலைக்காட்சியின் தொகுப்பாளரும், மூத்த நிருபருமான ஹரி சீனிவாசன்,

அமெரிக்காஸ், மெக்கின்சி அன்ட் கம்பெனி’ யின் தலைவர் விக்ரம் மல்ஹோத்ரா,

தேசிய புத்தக விமர்சகர்கள் வட்டத்தின் உறுப்பினரும், பிரபல விருது பெற்ற நூலாசிரியருமான பாரதி முகர்ஜி ஆகிய 4 இந்தியர்களும் அடங்குவர்.

 

நியுயார்க் நகரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் இவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது பெறுவோரை குறித்து கார்னெகி கார்பரேஷன் நிறுவன தலைவர் வர்தன் கிரரோரியன் கூறுகையில்,

‘சாதனை புரிந்துள்ள இந்த அமெரிக்கர்கள், இந்த நாட்டை நிறுவிய எங்கள் முன்னோரை போன்றவர்கள் ஆவர்’ என புகழாரம் சூட்டினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.