Show all

தனிஒருவராக வவுனியாவில் கவனஈர்ப்புப் போராட்டம்! இலங்கையின் மொத்தக் கடனை அடைக்க நான் தயார் என்பதாக

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். ஐக்கிய நாடுகள் அவை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரிவித்து வவுனியாவில் தனி;ஆள் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

14,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளதான தகவல் உலக நாடுகளின் கவனம்பெற்று வருகிறது. 

அண்ணியச்செலாவணி போதிய கையிருப்பு இல்லை. தூதரக ஊழியர்களுக்குச் சம்பளம் கிடைக்கவில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கைக்கான ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளன. இலங்கை- இந்தியாவையும் சீனாவையும் உதவிட வேண்டுகோள் விடுப்பதாகத் தகவல். இராஜபக்ச பதவிவிலகப் போவதாகத் தகவல்; இப்படிப் பற்றபல தகவல்கள் உலக நாடுகளின் கவனம்பெற்று வருவதாகத் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தனிஆளாக ஒருவர், இந்தவகைக்கு தன்னால் தீர்வு தரமுடியும்! அனுமதிக்குமா ஐக்கிய நாடுகள் அவை? என்றதொரு போராட்டத்தை முன்னெத்திருந்திருந்தது உலகை பரபரப்பாக்கியுள்ளது. 

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். ஐக்கிய நாடுகள் அவை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரிவித்து வவுனியாவில் தனி;ஆள் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

வவுனியா நகர மணிக்கோபுர சந்தியில் நின்று அந்த மனிதர் இன்று போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். இதன்போது, இலங்கை தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன், 
'இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். இதை ஐ.நா அவை ஏற்றுக் கொள்ளுமா? எங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுமா? இதற்கு மக்கள் நாம் ஒன்றுபடுவோம்' என எழுதப்பட்ட முழக்க அட்டையையும் ஏந்தியிருந்தார்.

அவரின் கவனயீர்ப்பு போராட்டத்தால் மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக காவல்துறையினர் அறிவுறுத்தியதையடுத்து, பழைய பேருந்து நிலையம் முன்பாக சென்று சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அதன் பின் அங்கிருந்து அவர் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,112.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.