Show all

தமிழக அரசியல்வாதிகள் பாதைக்கு திரும்பியிருக்கும் இலங்கை தமிழ் அரசியல்வாதிகள்.

20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ விடுதலை புலிகள் மீண்டும் வர வேண்டும் என வடக்கு மாகாண பெண் அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து இன்று பாராளுமன்றத்தில் கடும் அமளியை ஏற்படுத்தியது. 

இலங்கை வடக்கு மாகாண அரசில் அமைச்சராக இருப்பவர் விஜேயகலா மகேஷ்வரன். ஆளும் ஐக்கிய தேதிய கட்சி உறுப்பினரான இவர் நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசுகையில், 'ஒன்பது  ஆண்டுகளுக்கு முன்னர் நாம் எப்படி இருந்தோம். நாம் தலைநிமிர்ந்து வாழ, தெருவில் சுதந்திரமாக நடமாட, நமது குழந்தைகள் பத்திரமாக பள்ளி சென்று வர தற்போது உள்ள சூழலில் விடுதலைப் புலிகள் மீண்டும் வந்தால் மட்டுமே சாத்தியம்' என்று பேசியிருந்தார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் 6 அகவை சிறுமி பாலியல் வன்முறையால் கொலை செய்யப்பட்டாள். இதனை மேற்கோள் காட்டி பேசிய விஜயகலா, 'இதற்காகவா மைத்திரிபால சிறிசேனாவுக்கு நாங்கள் வாக்களித்தோம்' என்றார். வடக்கு மாகாண பகுதியில் எந்த வளர்ச்சி திட்டமும் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

விஜேயகலாவின் இந்த பேச்சு அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று அமளியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆளும் கட்சி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய கல்வி அமைச்சர் அகில விராஜ் கரியவாசம், 'விஜேயகலாவின் பேச்சு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசியல்வாதிகளும் உணர்ச்சிப்பூர்வமான  பேச்சு அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,838.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.