Show all

பேசிவிட்டு கையடக்கப் பையில் வைத்த பெண்ணின், சாம்சங் கேலக்ஸி நோட்-9 பேசி பற்றியெரிந்தது

03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு மேல் விலையுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 9 கடந்த மாதம் அறிமுகம் ஆனது. அதில் 4000 ஆம்பியர் மின்கலத் திறன் உள்ளதைக் கண்டு பலரும் ஆச்சரியதில் ஆழ்ந்தனர்.

அதேநேரத்தில் பாதுகாப்பு அம்சங்கள் சிறிது அச்ச உணர்வை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த சாம்சங் தலைவர் கோஹ், மின்கலத்லைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக உள்ளதென்றும் தெரிவித்தார்.

ஆனால் ஒரு மாதத்திற்குள்ளாக அமெரிக்காவில் லாங் தீவை சேர்ந்த டீன் சாங் எனும் பெண் ஒருவரின் கைப்பையில் சாம்சங் கேலக்ஸி நோட் 9 பற்றி எரிந்ததாக செய்திகள் வலம் வருகின்றன.

இதுதொடர்பாக இழப்பீடு கேட்டு அவர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். எலிவேட்டரில் அவர் சென்று கொண்டிருந்தபோது, பேசியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதிக சூடு ஏற்பட்டதால், அதனை தனது கையடக்கப் பையில் வைத்து கையில் பிடித்திருந்தார். அடுத்த சில நிமிடங்களில் சத்தத்துடன் போன் எரியத் தொடங்கியது. இதில் அவரது கையிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த ஒருவர் தண்ணீரை ஊற்றி பற்றி எரிந்த பேசியை அணைத்துள்ளார். இந்தத் தகவலை நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ளது.

டீன் சங் தனது மனுவில், தனது கையடக்கப் பையில் வைத்திருந்த அனைத்து பொருட்களும் எரிந்து விட்டன. இதற்கு சாம்சங் நிறுவனம் இழப்பீடு தர வேண்டும். அதன் நோட் 9-ன் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,915.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.