Show all

நடப்பு காலண்டில் எகிறியிருக்கிறதாம்! எலான்மஸ்க், பெசோஸ், பில்கேட்ஸ் என எல்லாரையும் தாண்டி அதானியின் சொத்து

அம்பானிக்கு அடுத்தபடியாக 97.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அதானி இருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் நடப்பு காலண்டில் மட்டும் அதானியின் நிகர சொத்து மதிப்பு 27விழுக்காடு அதிகரித்துள்ளது. நாம் அடிக்கடி உலகப்பெரும்பணக்காரர்கள் பற்றி பேசுவது புலம்பல் வகைக்கானது அன்று. உலகப்பட்டியலில் சிவநாடர் போல தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறைய பெரும்பணக்காரர்கள் இடம்பெற வேண்டும் என்கிற ஆசையும் கனவும் பற்றிதாகும்.

20,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: அதானி குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான கௌதம் அதானி, நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் மட்டும் டெஸ்லா நிறுவனம் எலான் மஸ்க், அமேசான் நிறுவனத் தலைவர் ஜெப் பெசோஸ், பில் கேட்ஸ் மற்றும் வாரன் பபெட் உள்ளிட்டோரை விட அதிக பணம் சம்பாதித்திருக்கிறார். இந்த தகவல் புளூம்பெர்க் பெரும்பணக்காரர் குறியீடு மூலம் தெரியவருகிறது. 

புளூம்பெர்க் பெரும்பணக்காரர் குறியீடு என்பது உலகம் முழுவதும் உள்ள 500 பணக்காரர்களின் அன்றாட ஏற்ற இறக்கங்களைக் கண்காணிக்கும் தளமாகும். 

கௌதம் அதானி 21.1 பில்லியன் டாலர் ஈட்ட முடிந்த அதே நேரத்தில் உடன் இந்திய வணிக அதிபரான முகேஷ் அம்பானி 8.24 பில்லியன் டாலர் மட்டுமே ஈட்டினார். அம்பானி மற்றும் அதானி ஆகியோர் ஆசியாவின் இரண்டு பணக்காரர்கள் ஆவார்கள். 

உலக அளவிலான பட்டியலில் உள்ள முதல் 10 பணக்காரர்களில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 98.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார். 

அம்பானிக்கு அடுத்தபடியாக 97.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அதானி இருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் நடப்பு காலண்டில் மட்டும் அதானியின் நிகர சொத்து மதிப்பு 27விழுக்காடு அதிகரித்துள்ளது. 

போர்ப்ஸ் நிகழ் பெரும்பணக்காரர்கள் பட்டியலின்படி, இந்தியாவின் இரு பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைத் தாண்டி இருக்கிறது. 

புளூம்பெர்க் குறியீட்டின்படி, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், 271 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 1.14 பில்லியன் டாலர் சம்பாதித்திருக்கிறார். 

அதேபோல் இந்த பட்டியலில் ஜெப் பெசோஸ் எலான் மஸ்கை விட இந்த ஆண்டு 4.30 பில்லியன் டாலர்களை இழந்திருக்கிறார். 

அதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் 4.48 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
பெர்கஷயர் ஹாத்வே தலைமை நிர்வாக அதிகாரி வாரன் பபெட்டின் நிகர மதிப்பு 128 பில்லியன் டாலர் ஆக இருக்கிறது. இவர் நடப்பு காலண்டில் மட்டும் 18.7 பில்லியன் டாலர் ஈட்டியுள்ளார். 

இந்த பட்டியலில் உள்ள பிற இந்தியர்களின் விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்தப் பட்டியலில் அசிம் பிரேம்ஜி 34.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 36-வது இடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவநாடார் 28.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 46-வது இடத்தையும், ராதாகிசன் தமானி 20.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 75-வது இடத்தையும் பிடித்துள்ளார். அதேபோல் லட்சுமி மிட்டல் 20.2 பில்லியன் நிகர மதிப்புடன் 78-வது இடத்தில் இருக்கிறார்.

நாம் அடிக்கடி உலகப்பெரும்பணக்காரர்கள் பற்றி பேசுவது புலம்பல் வகைக்கானது அன்று. உலகப்பட்டியலில் சிவநாடர் போல தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறைய பெரும்பணக்காரர்கள் இடம்பெற வேண்டும் என்கிற ஆசையும் கனவும் பற்றிதாகும். பொருள் ஈட்டுவது குற்றச்செயல் அல்ல. அதை குற்றமாக்குகிற எந்த நாட்டு அரசும்- அதில் தனக்கு வரியாக பங்கு தரவில்லை என்கிற குற்றசாட்டை- 'சொத்துக் குவிப்பு' என்கிற பொய்யான தலைப்பில் அடையாளப்படுத்துகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,207. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.