Show all

சனாதனம் அறிவோம்! அயற்சொற்கள் வரிசையில்

சனாதனம் என்கிற தலைப்பு, தமிழ்நாட்டின் பேரளவான பேசுபொருள் ஆகியிருக்கிற நிலையில், சனாதனம் என்கிற அந்த சமஸ்கிருதச் சொல்லில் அப்படி என்ன பாராட்டத்தக்க பொருள் பொதிக்கப்பட்டிருக்க முடியும் என்கிற ஆய்வில் கிடைத்த தகவல்களின் தொகுப்பு இந்தக் கட்டுரை.

28,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5125. 

சமஸ்கிருத மொழியை வடஇந்தியர்கள் பேரளவாகக் கொண்டாடினாலும் தமிழர்கள் சமஸ்கிருதத்தை புரிந்து கொள்கிற அளவிற்கு வட இந்தியர்களால் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் சமஸ்கிருதத்தில் 20லிருந்து 30 விழுக்காடு சொற்கள் தமிழே.

ஆனால் வட இந்தியர்களால் உருதுமொழியை பேரளவாகப் புரிந்து கொள்ள முடியும். எனெனில் சமஸ்கிருத எழுத்தில் எழுதப்படுகிற உருதுதான் ஹிந்தி.

சனாதனம் என்பது சமஸ்கிருதச் சொல். சனாதனம் என்கிற சொல்லை மிகமிக பேரளவாக புனைவு கற்பித்து பாராட்டி வருகின்றனர் அண்மைக்காலமாக பாஜக ஆர்வலர்கள். 

போக்கிரித்தனம், மூலதனம், அயோக்கியத்தனம், சீதனம், என்கிற சொற்களில் பொருத்தப்பட்டுள்ள தனத்திற்கு கொண்டிருத்தல் என்று பொருள் ஆகும்.

சனா, சனம் என்றால் மக்கள்.

சனாதன தர்மம் என்றால் மக்கள் கொண்டிருக்க வேண்டிய நடைமுறை என்று பொருள்.

இந்த, மக்கள் கொண்டிருக்கிற நடைமுறை என்பதான சனாதனம் என்கிற சொல், மதம் என்கிற சொல் மாதிரி தமிழ் இலக்கணத்தில் நிறுவப்படுகிற சொற்றொடரின் பகுதிகளில் வருகிற எழுவாய் அல்ல. 

அழகன் வீட்டைக் கட்டினான் என்பதில் அழகன் எழுவாய். வீடு பயனிலை. கட்டினான் என்பது செயப்படுபொருள். இந்தச் சனாதனம் என்கிற சொல் எழுவாயோ பயனிலையோ அல்ல. செயப்படு பொருளே ஆகும். 

அழகன் மூட்டை முடிச்சுகளைக் கட்டினான் என்றால் கட்டினான் என்பதற்கு பொருள் மாறி விடுகிறது.

ஆக சனாதனம் என்கிற சொல்லை பிராமணர்களும், பிராமணச்சார்பாளர்களும், பிராமண எதிர்ப்பாளர்கள் மட்டுமே முன்னெடுக்கின்றனர்.

மாறாக மற்றொரு மதம், அந்த மதத்தின் பெயரோடு சனாதனத்தைச் சேர்த்து பயன்படுத்துமேயானால் அந்த மதம் கொண்டாடும் நடைமுறைகள் என்று பொருள் ஆகிவிடும்.

சனாதனம் அல்லது சனாதன தர்மம் என்கிற சொற்கள் எழுவாயாக இல்லாத நிலையில் அது எந்த வொன்றையும் சுட்டி நிற்காது.

மகாபாரதத்தில் சனாதன தர்மமாக ஏகலைவனுக்கு போர்பயற்சி மறுக்கப்படுகிறது.
மனுசாஸ்திரத்தில் சனதன தர்மாக பல்வேறு ஏற்றதாழ்வுகள் நிறுவப்பட்டுள்ளன.
ஒன்றிய பாஜக அரசு ஹிந்துத்துவா சனாதன தர்மமாக மேல்தட்டு மக்களுக்கு பத்து விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.

வள்ளலார் சனதன தர்மம் அன்றாடம் வருகிற ஏழைகளுக்கு எல்லாம் உணவளிக்கிறது என்று அங்கே சனதனத்தை பொறுத்த முடியும்.
வள்ளலார் முன்னெடுக்கும் சனாதன தர்மம் பாராட்டத்தக்கது.

மகாபாரதத்தில், மனுசாஸ்திரத்தில், ஒன்றிய மோடி அரசில் முன்னெடுக்கப்பட்ட சனாதனம் சாடத்தக்கது அவைகள் அவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டியதும் ஆகும்.

இதை எதிர்த்துப் பேசியிருக்கிற உதயநிதிக்கும் அந்த மகாபாரதத்தில், மனுசாஸ்திரத்தில், ஒன்றிய மோடி அரசில் முன்னெடுக்கப்பட்ட மூன்றுக்கும் முரண்படுகிற அதே அடிப்படை ஆகும்.

தமிழ்நாட்டு ஆட்சியில் இருக்கிற உதயநிதிக்கு தமிழியலைக் கொண்டாடும் வகைக்கு பல ஆயிரம் கடமைகள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் தலைப்பு தமிழியல் இல்லை. திராவிடம் என்கிற பிராமணிய எதிர்ப்பே. உதயநிதி அவர்கள் இயக்கம் சார்ந்திருக்கிற அடிப்படைக்குச் சரியாக இருக்கிறார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,736.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.