Show all

பாகிஸ்தான் கோரிக்கை ஏற்பு! காஷ்மீர் குறித்து விவாதிக்க, முஸ்லிம் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டை நடத்திட

முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள முஸ்லிம் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டை நடத்த, வளைகுடா நாடான சவுதி அரேபியா முன்வந்துள்ளது. இந்த மாநாட்டின் நோக்கம், பாக்கிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிப்பதன் பொருட்டு என்பதாகச் சொல்லப்டுகிறது.

15,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள முஸ்லிம் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டை நடத்த, வளைகுடா நாடான சவுதி அரேபியா முன்வந்துள்ளது. இந்த மாநாட்டின் நோக்கம், பாக்கிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிப்பதன் பொருட்டு என்பதாகச் சொல்லப்டுகிறது.

முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்பில், 57 முஸ்லிம் நாடுகள் இடம்பெற்று உள்ளன. சவுதி அரேபியா தலைமையிலான இந்த அமைப்பில், பாக்கிஸ்தானும் இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவில், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு தகுதி நீக்கப்பட்டதற்கு, பாக்கிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என, 57முஸ்லிம் நாடுகள் இடம்பெற்றுள்ள முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்பில் பாக்கிஸ்தான் கோரிக்கை விடுத்தது. 

இந்த நிலையில், சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்கான், பாக்கிஸ்தானுக்கு ஒரு நாள் பயணமாக சென்றுள்ளார். அப்போது, பாக்கிஸ்தான் தலைமைஅமைச்சர் இம்ரான் கான், வெளியுறவு அமைச்சர் சா மகமுத் குரேசி உள்ளிட்டோரை சந்தித்தார்.

அப்போது, பாக்கிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க, முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள முஸ்லிம் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டை நடத்த, தயாராக உள்ளதாக, சவுதி அரேபியா கூறியுள்ளது. இந்த சந்திப்புகளின்போது, இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து, இம்ரான்கான், குரேசி விளக்கியதாக, பாக்கிஸ்தான்  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,382.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.