Show all

பாகிஸ்தானுக்கே சொந்தமான கோஹினூர் வைரத்தை மீட்க வேண்டுமென வழக்கு

ஒருங்கிணைந்த இந்தியாவை ஆண்ட கிழக்கு இந்தியா கம்பெனி, கடந்த 1849-ம் ஆண்டில் பஞ்சாப் பிராந்தியத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது. அப்போது பஞ்சாப் மன்னராக இருந்த 14 வயது சிறுவனிடம் இருந்து கோஹினூர் வைரம் பறிக்கப்பட்டது. அந்த வைரம் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அன்றைய மன்னர் ஆண்ட பகுதி தற்போது பாகிஸ்தான் எல்லைக்குள் அமைந்துள்ளது. எனவே கோஹினூர் வைரம் பாகிஸ்தானுக்கே சொந்தம் என்றும் அதை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி ஜாவித் இக்பால் ஜாப்ரி என்ற வழக்கறிஞர் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக இன்று லாகூர் உயர் நீதிமன்றத்தில் தனது பதிலை சமர்பித்த பஞ்சாப் மாகாண அரசு, கிழக்கிந்திய கம்பெனியுடன் மகாராஜா  ரஞ்சீத் சிங்கிடம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாகவும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் மதிப்பு மிக்க கோஹினூர் வைரம் வழங்கப்பட்டதாகவும் எனவே வைரத்தை திரும்ப தருமாறு இங்கிலாந்து அரசை கேட்டுக்கொள்ள முடியாது என்றும்  தெரிவித்தது.

இதையடுத்து,  மகாராஜா ரஞ்சீத் சிங் - கிழக்கிந்திய கம்பெனி இடையேயான ஒப்பந்தத்தின் நகலை அடுத்த விசாரணையின் போது சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட லாகூர் உயர் நீதிமன்றம் வழக்கின் விசாரணையை மே 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.