Show all

விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா சொத்து விவரம்

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

தமிழகச் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி மற்றும் தமாகாவுடன் இணைந்து தேமுதிக போட்டியிடுகிறது. இதில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதையொட்டி, வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக விஜயகாந்த் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்றார். அதனைத் தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி முகுந்தனிடம் விஜயகாந்த் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 

அதன்படி விஜயகாந்தின் அசையும் சொத்து மதிப்பு 7 கோடியே 60 லட்சம் ரூபாய் எனவும், அசையா சொத்தின் மதிப்பு 19 கோடியே 37 லட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை சுமார் 7 கோடியே 61 லட்சம் ரூபாய் எனவும், வங்கி மற்றும் இதர நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை 4 கோடியே 82 லட்சம் ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போன்று, அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்தின் அசையும் சொத்து மதிப்பு 4 கோடியே 57 லட்சம் ரூபாய் என்றும், அசையா சொத்து மதிப்பு 17 கோடியே 43 லட்சம் என்றும் வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.