Show all

எங்கள் நாடு விற்பனைக்கு அல்ல! ஐநா கூட்டத்தில் ட்ரம்பை விளாசிய பாலஸ்தீன அதிபர்

13,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், எந்த நாட்டின் சட்டத் திட்டங்களையும் மதிக்காமல் இஸ்ரேல் மனம்போன போக்கில் செயல்படுகிறது.

ட்ரம்ப் தரும் ஆதரவால் இஸ்ரேல் தொடர்ந்து தனது இனவாத செயல்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஐநாவின் எந்த ஒரு விதிமுறைகளையும் இஸ்ரேலும், அமெரிக்காவும் கடை பிடிப்பதில்லை.

அமெரிக்காவை நாங்கள் தற்போது புதிய கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறறோம். அமைதி முயற்சியில் இனிமேலும் அமெரிக்க நடுநிலை நாடாக இருக்க முடியாது. எங்களின் நண்பனாக இருக்க முடியாது.

பாலஸ்தீன அகதிகளுக்காக ஐநா முயற்சியில் நடக்கும் நலத்திட்டங்களுக்கு இனிமேல் நிதியுதவி அளிக்கப்போவதில்லை என ட்ரம்ப் நிர்வாகம் மிரட்டுகிறது. எங்கள் நாடு ஒன்றும் விற்பனைக்கு அல்ல. நாங்கள் யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய தேவையும் ஏதுமில்லை. உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் மீட்பு பணிகளை மேற்கொள்வோம்.

அறுபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா உருவானது முதல் பாலஸ்தீன பகுதியில் அமைதியை ஏற்படுத்த இதுவரை 700 ஒப்பந்தங்களையும், உடன்பாட்டையும் மேற்கொண்டுள்ளோம். ஆனால் எதையுமே இஸ்ரேலும், அமெரிக்காவும் மதிப்பதில்லை எனக் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,925.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.