Show all

ஒபாமா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்

அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரத்தைத் தடுப்பது குறித்த உரை நிகழ்த்திய போது அதிபர் ஒபாமா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஆண்டிற்கு நூற்றுக்காணக்கானோர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாகுபாடு இல்லாமல் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகி வருவதால் காலம் கடந்து விழித்துக் கொண்டுள்ள அமெரிக்கா அரசு துப்பாக்கி விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தைக் குறைப்பது தொடர்பான உரையை அமெரிக்கா அதிபர் ஒபாமா வௌ;ளை மாளிகையில் நிகழ்த்தினார். உரையின் போது கடந்த ஆண்டு 20 பள்ளி மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியான சம்பவத்தை ஒபாமா நினைவு கூர்ந்த போது தன்னை அறியாமலேயே அவர் கண்ணீர் விட்டார்.

துப்பாக்கி கலாச்சாரம் குழந்தைகள் வரை பரவி உள்ளதற்கு வருத்தம் தெரிவித்த ஒபாமா வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் கடமை, துப்பாக்கி வன்முறை கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்றார். துப்பாக்கி உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் தங்கள் பிடியில் அரசியல்வாதிகளை வைத்திருக்கலாம் ஆனால் எப்பொதும் அவர்களால் அமெரிக்காவைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் ஒபாமா கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.