Show all

இயல்அறிவு தமிழைக் கொண்டாடுவது வினையெச்சம்! மதங்கள் நிகழ்காலத்தை முன்னெடுத்துள்ளன.

இயல்அறிவு (சயின்ஸ்) வினையெச்சமாக, அதாவது நேற்றும். இன்றும், நாளையும் தமிழைக் கொண்டாடும் என்கிற நிலையை நிறுவியிருக்கிறது. தற்போது மதங்களும் தமிழைக் கொண்டாடுதலில் நிகழ்காலத்தை முன்னெடுத்து வருகி;ன்றன.

20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இஸ்லாமியர்களின் அருட்தலங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கும் என சவூதி அரசு அறிவித்துள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும், இஸ்லாமியர்கள் அருட்தலமான சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் அரபா நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. நபிகள் நாயகம் இறுதியாக அரபா குன்றின் மேல் நின்று சொற்பொழிவு ஆற்றிய நாளை இஸ்லாமியர்கள் அருள்நாளாக கடைபிடித்து வருகின்றனர்.

அன்றைய நாளில் அங்கு நடைபெறும் சொற்பொழிவு, இதுவரை 10 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வந்தது. தற்போது தமிழ் மொழியும் இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஸ்பானிஷ் உள்ளிட்ட 4 மொழிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனவாம். இனி மெக்காவின் அரபா நாள் சொற்பொழிவு தமிழ் உட்பட 15 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்படும் என இஸ்லாமிய தலைவர் அல் சுதைஸ் தெரிவித்துள்ள்ளதாக அரபு நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உலக இயல்அறிவுதான் (சயின்ஸ்) தமிழின் அருமை அறிந்து, தமிழை கைகோர்த்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது என்றால் (அதற்கான எடுத்துக்காட்டு சுந்தர் பிச்சை போன்றவர்கள்) தற்போது உலக மதங்களும் தமிழின் அருமை அறிந்து, தமிழை கைகோர்த்து கொண்டாடக் களமிறங்கியுள்ளன. அண்மையில் கிருத்துவ மதம் தமிழ்வாழ்த்து பாடி சிறப்பித்தது. தற்போது இஸ்லாமிய மதம் இந்த அறிவிப்பில் தமிழைக் கொண்டாடுகிறது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,300.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.