Show all

உடைமையாகக் கொடுத்ததைக் கையாளும் கடமை ஆற்ற முடியாத நைஜீரியா! கொரோனா தடுப்பூசிகள் அழிப்பு

தமிழ்நாட்டில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுக்களில் எண்பது விழுக்காடு படிக்க முயலாமலே கிடைப்பில் போடப்பட்டுள்ளன. இப்படி வரலாற்று உடைமையை பொறுப்பாகக் கையாள வக்கில்லாத தமிழ்இனம் போல- நன்கொடையாகக் கிடைத்த கொரோனா தடுப்பூசியைக் கையாள வக்கில்லாத நைஜிரிய அரசு அவைகளை அழிக்கும் வகைக்கு களமிறங்கியுள்ளது.

09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: அதிகரித்து வரும் கொரோனா குறுவிப் (வைரஸ்) பரவலை எதிர்கொள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஐரோப்பா, இந்தியா, ரஷ்யா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் நன்கொடையாக வழங்கி வருகின்றன.

உலக நலங்கு அமைப்பு நைஜீரியாவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. ஆனால் அங்கு போதிய மருத்துவ கட்டமைப்பு இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது.

இந்நிலையில், நன்கொடையாக பெறப்பட்ட 10 லட்சம் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகளை நைஜீரிய அரசு மண்ணில் புதைத்து அழித்துள்ளது. 

இது தொடர்பாக அந்நாட்டு அரசு கூறுகையில், காலாவதியானதால் 10.66 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி தடவைகள் மண்ணில் புதைத்து அழிக்கப்பட்டன என தெரிவித்தது.

தடுப்பூசி தொடர்பாக எதிர்மறை தகவல்கள் பரவியதால் தடுப்பூசி செலுத்துவதில் நைஜீரிய மக்கள் தயக்கம் காட்டி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,107.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.