Show all

இந்திய மதிப்புப்படி ரூ.96 லட்சம் வரை இருந்திருந்த பணம்! இயங்கலையில் வாங்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டியில்

இயங்கலையில் வாங்கிய குளிர்சாதனப் பெட்டி வீட்டிற்கு கொண்டுதரப்பட்டதும், அதைத் திறந்து பார்த்தவர், அதிர்ச்சியில் உறைந்து போகியுள்ளார். காரணம் அந்தக் குளிர்சாதனப் பெட்டிக்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. சுமார் 1,30,000 டாலர் இந்திய மதிப்புப்படி ரூ.96 லட்சம் வரை இருந்திருக்கிறது. 

02,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தென்கொரியா நாட்டின் ஒரு தீவு பகுதியைச் சேர்ந்தவர் இயங்கலை மூலம் பழைய குளிர்சாதன பெட்டி ஒன்றுக்கு கேட்பு அளித்துள்ளார். 

அவருக்கு அந்த குளிர்சாதனப் பெட்டி வீட்டிற்கு கொண்டுதரப்பட்டதும், அதைத் திறந்து பார்த்துள்ளார். திறந்ததும் அதிர்ச்சியில் உறைந்து போகியுள்ளார். காரணம் அந்தக் குளிர்சாதனப் பெட்டிக்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. சுமார் 1,30,000 டாலர் இந்திய மதிப்புப்படி ரூ.96 லட்சம் வரை இருந்திருக்கிறது. 

நம்முடையது அல்லாத பணம் நமக்கு எதற்கு என்று நினைத்த அந்த நல்லமனிதர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். 

அந்தப் பணம் குறித்து தகவல் அறிய, குளிர்சாதனப் பெட்டியின் இயங்கலை விற்பனையாளரை அடையாளம் காண காவல்;துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தென் கொரிய சட்டத்தின்படி அவர் பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்தாலும் ஒரு குறிப்பிட்ட தொகை அவருக்கு பரிசாக வழங்கப்படும். அதேபோல் கண்டெடுத்தவரை விசாரித்த பிறகு பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரிப்பார்கள். 

பணத்தின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் அந்த பணம் கண்டெடுக்கப்பட்டவரிடமே ஒப்படைக்கப்படும். உரிமையாளரை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டாலும் கண்டெடுத்தவருக்கு குறிப்பிட்ட தொகை பரிசாக வழங்கப்படும். பணத்திற்குக் குற்றவியல் வழக்குகளுடன் தொடர்பு இருந்தால் மட்டும் அது இரண்டு தரப்பினருக்கும் வழங்கப்படமாட்டாது.

இதில் நமக்குத் தெரியவருகிற ஒரு சுவையான தகவலின்படி குறைந்த வங்கி வட்டி விகிதங்கள் காரணமாக கிம்ச்சி வகை குளிர்சாதன பெட்டியில் பணத்தை சேமித்து வைக்கும் பழக்கம் அந் நாட்டு மக்களிடையே அதிகரித்து இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது என்கிற தகவல் அடிப்படையில்- அந்தப் பணம் உறுதியாக சேமிப்புப் பணமாகவே இருக்கும் என்றும் அந்த குளர்பதனப் பெட்டி கிடைக்கப் பெற்றவருக்கு நல்ல தொகை கிடைக்கும் என்றும் பேசப்படுகின்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.