Show all

மிகச்சிறப்பாக அமைந்தது மின்னூல் அறிமுக விழா! சான்றோர்தளத்தின் 42வது நூலாக குமரிநாடனின் மந்திரம் குறித்த நூல்

தலைமை ஏற்றுச் சிறப்பித்த சான்றோர் பெருந்தகை: சாக்ரடீஸ் மு.சக்கையா அவர்கள்- குமரிநாடனின் நட்பு தொடங்கி, அவரின் பெயருக்கான காரணம், அவர் கிண்டில் பதிப்பில் வெளியிட்ட பத்து நூல்கள் குறித்த விரிவான விளக்கத்தோடு, தன் நினைவாற்றல், தனக்கு நண்பர்கள் வழங்கிய சாக்ரடீஸ் என்கிற பெயருக்கான சிறப்பு கொண்டு அசத்தினார்கள். 

30,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: சான்றோர்த்தளம் அமைப்பு முன்னெடுத்த நாற்பத்தி இரண்டாவது மின்னூல் அறிமுக விழா. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. திறனாய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது எனது (குமரிநாடன்) அமேசான் கிண்டில் பதிப்பு நூலான, நம்முடைய தலைஎழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா! என்கிற நூலாகும்.

இந்த நிகழ்வைக் கூகுள் குவியம் செயலி மூலமாக முன்னெடுத்தது சான்றோர்த்தளம் அமைப்பு. இந்தக் குவியம் நிகழ்ச்சிக்கான கூட்டஅடையாளஎண்: 4775896897. கடவுச்சொல்: 123456 ஆகும். 

தலைமை ஏற்றுச் சிறப்பித்த சான்றோர் பெருந்தகை: சாக்ரடீஸ் மு.சக்கையா அவர்கள்- குமரிநாடனின் நட்பு தொடங்கி, அவரின் பெயருக்கான காரணம், அவர் கிண்டில் பதிப்பில் வெளியிட்ட பத்து நூல்கள் குறித்த விரிவான விளக்கம், அளித்து தன் நினைவாற்றல், தனக்கு நண்பர்கள் வழங்கிய சாக்ரடீஸ் என்கிற பெயருக்கான சிறப்பு கொண்டு அசத்தினார்கள். 

இந்த அமர்வில் திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நூலான நம்முடைய தலைஎழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா! என்கிற நூலினை குறித்து, மின்நூலைத் திறனாய்வு செய்யும் சான்றோர் பெருந்தகை: கவிஞர் வைரமணி அவர்களுக்கு திறனாய்வு செய்ய ஏதாவத மிச்சம் வைப்பாரோ மாட்டாரோ என்கிற வகைக்கு நூலினை அ முதல் ன் வரை ஊடுருவி படித்ததை அறிவிக்கும் வகை;கு மிகத் தெறிவான திறனாய்வை முன்னெடுத்தார். 

மின்நூலைத் திறனாய்வு செய்யும் சான்றோர் பெருந்தகை: கவிஞர் வைரமணி, துணைப்பேராசிரியர், தமிழ்ப்பேராயம், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் அவர்கள் தன் பங்குக்கு சிறப்பான திறனாய்வை முன்னெடுத்தார்கள்.

தொடக்கவுரை ஆற்றி சிறப்பித்த சான்றோர் பெருந்தகை: அமிர்தம் பீட்டர்ராசன், நிறுவனர், சான்றோர்தளம் அவர்கள், தனக்கு குமரிநாடனோடான மொழிபெயர்ப்பு குறித்த ஒரு இனிய கவிதை உறவைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். 

சான்றோர் பலரின் கருத்துப் பகிர்வு எனது (குமரிநாடன்) ஏற்புரையைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டது. அதில் தியாக ரமேசு அவர்களின் உரையில் தான் இந்த நூல் சொல்லும் தளத்தில் இயல்பூக்கமாக இருந்து, இயங்கி வருவது குறித்து, தெரிவித்தது நூலுக்கான சிறப்பு அங்கீகாரம் ஆகும். தொடக்கத்தில் இருந்து நிகழ்ச்சியைக் கவனித்து வந்து- இறுதியில் பேசிய குமரிநாடனின் வாழ்க்கை நண்பர் இளந்தமிழ்வேள் நூலுக்கு கூடுதல் சிறப்பு அளித்து மகிழ்வித்தார்கள்.

நன்றியுரை ஆற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்த சான்றோர் பெருந்தகை: பேராசிரியர், முனைவர், வெற்றிநிலவன் அவர்கள் ஆவார்கள்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் பங்கு பெற்ற பாவலர் மன்னர்மன்னன் நூலாசிரியருக்கு நிறைய ஆலோசனைகளையும் கேட்புகளையும் முன்வைத்து நூலுக்கான சிறந்த பாராட்டுரையை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,217.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.