Show all

நம்ம பாஜக போன்றதா! புதிய இயக்குனராக ஜினா ஹேஸ்பெல் நியமனமாகும் அமெரிக்க சிஐஏ

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்காவின் நடுவண் புலனாய்வு நிறுவனம் என்னும் சி.ஐ.ஏ. இயக்குனராக மைக் பாம்ப்பியோ இருந்து வந்தார். அவரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக அதிபர் டிரம்ப் அண்மையில் நியமித்தார். 

அவருக்கு பதிலாக அமெரிக்க நடுவண் புலனாய்வு நிறுவனத்தின் புதிய இயக்குனராக 61 அகவையுடைய ஜினா ஹேஸ்பெல்லை அதிபர் நியமித்தார். அவரது நியமனத்துக்கு சில செனட் அவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், அவரது நியமனத்துக்கு நாடாளுமன்ற செனட் அவை நேற்று ஒப்புதல் கொடுத்துள்ளது. அதற்கான தீர்மானம் அமெரிக்க செனட் அவையில் நிறைவேறியது. ஜினா ஹேஸ்பெல் அமெரிக்காவின் நடுவண் புலனாய்வு நிறுவனத்தின் இயக்குனராக பதவியேற்கும் முதல் பெண் ஆவார்.

முன்பெல்லாம் கொஞ்சம் எடக்கு மடக்கான மனிதர்களை அமெரிக்க சிஐஏ உளவாளிகளாக இருப்பார்களோ என்று ஐயுறுவார்கள். தற்போது பாஜகவைச் சார்ந்த அனைவருமே, சிஐஏ உளவாளிகளாக இருப்பார்களோ என ஐயுறத்தோன்றும் வகையாகவே இருக்கிறார்கள். காரணம் பாஜகவே அமெரிக்க சிஐஏ போன்ற நிறுவனம் என்பதை உறுதி படுத்தி வருகிறது பாஜக. பீட்டர் அல்போன்ஸ், அரசியல் கட்சிகள் தவறு செய்வதுண்டு, ஆனால் பாஜக தவறு செய்வதையே வாழ்க்கை முறையாக கொண்ட கட்சி என்று பாஜகவை அடையாளப் படுத்துகிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர்அல்போன்ஸ்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,791.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.