Show all

முன்னால் துடுப்பாட்ட வீரர் சங்கக்காரா காட்டம்! இலங்கையை மண்டியிட வைத்துவிட்டனர் இனவாத மதவாதத் தலைவர்கள்

இலங்கையை மண்டியிட வைத்துவிட்டனர் இனவாத மதவாதத் தலைவர்கள் ஆனால் அதைவிட மோசமாக, அவர்கள் தங்கள் சொந்த குடிமக்களை இந்த உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் கொண்டு வந்ததற்கு கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை. என்று முன்னால் துடுப்பாட்ட வீரர் சங்கக்காரா காட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

29,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இலங்கையை மண்டியிட வைத்துவிட்டனர் நாம் தேர்ந்தெடுத்த தலைவர்கள். அவர்கள் மோசமான கொள்கைகளை வகுத்துள்ளனர் மற்றும் மோசமான நிதி நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளனர். என்று காட்டமாக தெரிவித்துள்ளார் முன்னால் துடுப்பாட்ட வீரர் சங்கக்காரா இணைய நேர்காணலில்.

இலங்கையில் இருந்து வெளியாகும்- மதவாதம் இனவாதத்திற்கு எதிரான, துணிச்சலான, வெளிப்படையான- ஏறத்தாழ முதலாவது பதிவு என்றே இதைக் கருதலாம். இது இன்றைக்கு சீரழிவைச் சந்தித்திருக்கிற இலங்கைக்குப் பாடமும்- உலகில் மற்ற மற்ற நாடுகளில் மதவாதம் இனவாதத்தை ஆதிக்கப்படுத்திக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கும் எச்சரிக்கையும் ஆகும். 

ஆனால் அதைவிட மோசமாக, அவர்கள் தங்கள் சொந்த குடிமக்களை இந்த உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் கொண்டு வந்ததற்கு கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை.

நாட்டில் நிலவி வரும் நெருக்கடிக்கு, மக்களுக்கு உடனடி குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் தேவை.

இதே அரசியல்வாதிகளை வேறு வேறு துறைக்கு மாற்றி பணியமர்த்துவதால் யாருக்கும் எந்தவித பயனும் இல்லை, இதனால் எந்தச் சிக்கலுக்கும் தீர்வும் கிடைக்கப்பேவாதில்லை.

தெருவில் போராடி கொண்டிருப்பவர்கள் புதிய தலைமுறை இளைஞர்கள். கூடுதல் விழிப்புணர்வுடன், தௌ;ளியஅறிவுடன் உறுதிப்பாடுடன் மற்றும் அச்சமற்ற ஒரு புதிய சமுதாயம் ஒன்றுபட்டு இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.

இலங்கை, இந்த நெருக்கடியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, இனவாதம் மற்றும் மதப் பிளவு சமூகம் அல்லது அரசியலில் எந்தப் பங்கையும் வகிக்காத ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் என தான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன்.

ஊழலுக்கும், உறவுமுறைகளுக்கும், இலங்கை மக்களின் முதுகில் குடும்ப வம்சத்தை கட்டியெழுப்புவதற்கும் இடமளிக்கக் கூடாது எனவும் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,216.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.