Show all

இன்று சேயோன்இயேசு பிறந்தநாள்! கிறித்துவ மதத்தினர் கொண்டாடும் முதன்மைத் திருவிழா

கிறுத்துவ மதத்தில் இயேசு சோயோனாகச் சுட்டப்படுவது- தமிழின் பொருள் இலக்கணத்தோடு இயேசு பெருமகனாருக்கு இருந்த தொடர்பு குறித்து ஆயவேண்டிய கடப்பாட்டைத் தெரிவிப்பதாகிறது.

10,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழர் தம் அகப்பொருள் இலக்கணத்தில், ஐந்திணைகளின் கருப்பொருட்களில் குறிஞ்சித்திணையின் தெய்வமாக சுட்டப்படுவது சேயோன் ஆகும். 

கிறுத்துவ மதத்தில் இயேசு சோயோனாகச் சுட்டப்படுவது- தமிழின் பொருள் இலக்கணத்தோடு இயேசு பெருமகனாருக்கு இருந்த தொடர்பு குறித்து ஆயவேண்டிய கடப்பாட்டைத் தெரிவிப்பதாகிறது.

தமிழ்நாடு முழுவதும் மத அடையாளத்திற்கு அப்பாற்பட்டும் சேயோன்இயேசு பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை பெசண்ட்நகர் இயேசுகோயில், சாந்தோம் இயேசுகோயில், செயிண்ட் தாமஸ் மலை இயேசுகோயில உள்ளிட்ட இயேசுகோயில்களில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு வணக்கத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

இயேசு பெருமகனார் பிறந்த இன்றைய நாளை கிறிஸ்துமஸ் திருவிழாவாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதலேயே சிறப்பு வணக்கங்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்டின.

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி இயேசு அன்னைத் திருக்கோயிலில் கிறிஸ்துமஸ் விழா கொரோனா கட்டுப்பாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெற்றது. 

கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

திருவள்ளூர், காக்களூர், ஈக்காடு, மணவாளநகர், திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், மப்பேடு, கீழச்சேரி, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, அரண்வாயல், திருமழிசை, வெள்ளவேடு மற்றும் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள இயேசு கோயில்களில் கிறிஸ்துமஸ் திருவிழாவையொட்டி கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இயேசு கோயில்கள் வண்ண விளக்குகளால் ஒப்பனை செய்யப்பட்டிருந்தன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,108.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.