Show all

இன்று காலை 6.30 மணிக்கு நிகழ்ந்தது! உலக நாடுகள் உற்று நோக்கிய வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்- டிரம்ப் சந்திப்பு

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் உன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.

இதையடுத்து, டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோர் முந்தாநாள் இரவே சிங்கப்பூர் வந்தடைந்தனர். இருவரது பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளது என சிங்கப்பூர் அரசும் தெரிவித்துள்ளது. 

இவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா உணவகத்தில் இன்று காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்நிலையில், சந்திப்பு நடக்கவுள்ள உணவகத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் சென்றடைந்தார். அவரை சந்திக்க வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தான் தங்கியிருந்த உணவகத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து செய்தி சேகரிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து 3000 க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் சிங்கப்பூரில் குவிந்துள்ளனர். 

உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு இன்று காலை 6.30  மணிக்கு நடைபெற்றது. இரு தலைவர்களும் சிரித்த முகத்துடன் கைகளை குலுக்கி கொண்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,816. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.