Show all

இஸ்லாத்துடன் பாகிஸ்தானை விட அதிக தொடர்பு கொண்ட நாடு இந்தியா.

இஸ்லாத்துடன் பாகிஸ்தானை விட அதிக தொடர்பு கொண்ட நாடு என இந்தியாவை கூற முடியும், எனெனில் இங்கு பாகிஸ்தானை விட அதிக முஸ்லீம் மக்கள் வாழ்கின்றனர் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படைகளின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் இடையேயான 3 நாள் பேச்சுவார்த்தை டெல்லியில் நடந்து வருகிறது.

இதற்காக பாகிஸ்தான் எல்லைப் படை பாதுகாப்பு ராணுவ தலைமை இயக்குனர்(பஞ்சாப்) உமர் பாரூக் புர்கி தலைமையில் 16 பேர் கொண்ட குழு இந்தியா வந்து உள்ளது. இந்திய தரப்பில் எல்லை பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் தேவேந்திர குமார் பதக் தலைமையிலான 23 அதிகாரிகள் கொண்ட குழு இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்று வருகிறது.

2-ம் நாளான இன்று இரு நாடுகளின் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளின் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை பாகிஸ்தான் அதிகாரி புர்கி சந்தித்து பேசினார்.

அப்போது ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் ராணுவ அதிகாரி புர்கியிடம் எல்லையில் முதல் தோட்டா இந்திய தரப்பில் இருந்து எப்போதும் வராது. இதே நிலைப்பாட்டில் இந்தியா தொடர்ந்து நீடிக்கும் என்று உறுதி அளித்தார்.இதற்கு பதில் அளித்த புர்கி, நான் எல்லைப் பாதுகாப்பு படையின் தலைமை அதிகாரி மட்டும்தான். உள்துறை மந்திரி போல் ஒரு தலைவர் அல்ல. எனவே இதுபற்றி என்னால் எந்த உறுதிமொழியையும் அளிக்க இயலாது. எனினும் நீங்கள் கூறியதை அப்படியே எங்களுடைய தலைமைக்கு தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து ராஜ்நாத் சிங் கூறுகையில், இந்தியாவைப்போன்று பாகிஸ்தானும் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு. இந்த பயங்கரவாதத்துக்கு எதிராக இருநாடுகளும் கண்டிப்பாக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். பாகிஸ்தானை விட அதிக முஸ்லீம் மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். எனவே இஸ்லாத்துடன் அதிக தொடர்பு கொண்ட நாடு என பாகிஸ்தானை விட இந்தியாவை கூற முடியும்  இவ்வாறு அவர் பேசினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.