Show all

இந்தியா, சீனாவில் கடந்த ஆண்டில் உருவாகியுள்ள புதிய பணக்காரர்கள்

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சுவிட்சர்லாந்தை சேர்ந்த யுபிஎஸ் வங்கி மற்றும் தணிக்கையாளர் அமைப்பு, கடந்த ஆண்டில் புதிதாக உருவாகியுள்ள கோடீஸ்வரர்கள் பற்றிய புள்ளி விபரங்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

அதன்படி, உலகம் முழுவதும், புதிதாக 1550 கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். அவர்களில் 637 பேர் ஆசியாவையும், 563 பேர் அமெரிக்க கண்டத்தையும், 342 பேர் ஐரோப்பாவையும் சேர்ந்தவர்கள். இந்தமுறை, இதுவரை இல்லாத அளவு அமெரிக்க கண்டத்தை, ஆசியா முந்தியுள்ளது.

ஆசியாவில் புதிதாக உருவான கோடீஸ்வரர்களில் 75 விடுக்காடு பேர் சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன் மூலம், இரு நாடுகளின் மொத்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இந்தமுறை அமெரிக்காவைவிட அதிகரித்துள்ளது.

இந்த புதிய கோடீஸ்வரர்களின் பட்டியலில் பாபாராம் தேவ், அமித்ஷா மகன் போன்ற இந்தியர்கள் 100 பேர் இடம் பிடித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.