Show all

முடிந்தால் எங்கள் இணையதளத்தை முடக்கிப் பாருங்கள் ஹேக்கர்களுக்கு பென்ட்டகன் சவால்

முடிந்தால் எங்கள் இணையதளத்தை முடக்கிப் பாருங்கள் என்று ஹேக்கர்களுக்கு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகன் சவால் வி;டுத்துள்ளது.

அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்ட்டகன். இதற்குச் சொந்தமான இணையதளத்திற்குள் கம்ப்யூட்டர் ஹேக்கர்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் இணையப் பாதுகாப்பில் பல நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

இன்னும் ஒரு சில மாதங்களில் செயல்படவுள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த புதிய இணையதளங்களில் உள்ள தகவல்களுக்குள் வேறு யாரும் ஊடுருவி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றது.

 

இந்நிலையில், முடிந்தால் யாராவது எங்கள் இணையதளத்தை முடக்கிப் பாருங்கள் என்று கம்ப்யூட்டர் ஹேக்கர்களுக்கு பென்ட்டகான் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளது.

இந்த இணைய தளத்திற்குள் ஹேக்கர்கள் நுழைவார்களா அல்லது, நுழையமுடியாமல் தவிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

உலகிலுள்ள பல்வேறு நாடுகளின் இணைய தளங்களை கண்காணிக்கும் பணியில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில், அமெரிக்காவின் இணையதளங்களை முடக்க பல்வேறு நாட்டவரும் முயற்சிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.