Show all

அமெரிக்காவை எப்படி நாங்கள் நம்ப முடியும்! நம்பிக்கையிழந்த ஈரான் கேள்வி

24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகியவற்றுடன் ஈரான் செய்துகொண்டது. 

ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அண்மையில் விலகிக்கொண்ட அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இது ஈரானின் வளர்ச்சிக்கும், அணு ஆயுதம் தயாரிப்பதற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து இரு நாடுகள் இடையேயும் மோதலான போக்கு நீடிக்கிறது. இதனையடுத்து பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தயாரென டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார். ஆனால் ஈரான் நிராகரித்து வருகிறது.

ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஜாரீப் பேசுகையில், ஒழுங்கற்ற முடிவுகளால் அமெரிக்காவின் மீதான நம்பிக்கையை உலக நாடுகள் இழந்துவிட்டன. இதன்பின்னர் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை என்பது மிகவும் கடினமானது. பேச்சுவார்த்தை தொடர்பாக இப்போது யோசிக்கப்படுகிறது, அவர்களை எப்படி நாங்கள் நம்ப முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,874.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.