Show all

பேய் பயத்தால் வீட்டைக் காலி செய்த குடியரசுத்தலைவர்

குடியிருக்கும் வீட்டில் பேய் தொல்லை இருப்பதாக எண்ணி அஞ்சி பிரேசில் குடியரசுத்தலைவர் தான் குடியிருந்த வீட்டைக் காலி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     பிரேசில் நாட்டின் குடியரசுத்தலைவர் மிசெல் தெமர் அகவை76. இவர் தன்னுடைய மனைவி மர்சிலா அகவை33. மற்றும் தனது மகன் மிசெல் சின்கோ அகவை7. ஆகியோருடன் அங்குள்ள ஆல்வோரட என்னும் இடத்தில் உள்ள அரண்மனை ஒன்றில் வசித்து வந்தார்.

     கடந்த சில நாட்களாக அதிபரும், அவரது மனைவியும் அந்த அரண்மனையில் சில இயல்புக்கு மாறான விசயங்களைத் தொடர்ச்சியாக உணர்ந்துள்ளனர். இதனால் சரியாக தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

     இதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறியும் பொருட்டு குடியரசுத்தலைவரின் மனைவி மர்சிலா கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

     அவர் மூலம் சில மாந்த்ரீக சோதனைகள் செய்துள்ளதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அச்சமடைந்த குடியரசுத்தலைவர் அந்த வீட்டை காலி செய்வது என்று முடிவு எடுத்து விட்டார்.

     தற்போது அவர் துணை குடியரசுத்தலைவர் இல்லத்துக்கு தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார்.

     பேய் பயம் காரணமாக குடி இருந்த வீட்டை காலி செய்துள்ள குடியரசுத்தலைவரின் இந்தச் செயல் அந்நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.