Show all

ஆளுநருக்கு அடி, உதை தெருவில் புரட்டி எடுத்த அவலம்

08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கிரீஸ் நாட்டின் தசலோனிகி நகரத்தின் ஆளுநராக 73 அகவையுள்ள யின்னிஸ் போட்டரிஸ் என்பவர் பதவி வகித்து வருகிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன் முதல் உலகப்போரில் துருக்கி நாட்டவர்களால் கொல்லப்பட்ட கிரேக்க நாட்டு மக்களுக்கு நினைவு செலுத்தும் விழாவானது, தசலோனிகி நகரில் நடைபெற்றது. இதில் நகர ஆளுநர் என்ற முறையில் யின்னிஸ் போட்டரிஸ் கலந்து கொள்ள வந்திருந்தார்.

அவரது வருகை பற்றி தகவலறிந்தவுடன் எதிர்ப்பு குழுக்கள் கூட்டமாக அங்கு வந்து ஆளுநர் யின்னிஸ் போட்டரிஸை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்து உதைத்தனர். நிலை தடுமாறி அவர் கீழே விழுந்த பின்னரும் தாக்குதல் தொடர்ந்தது.  பின்னர் காவல்துறையினரால் மீட்கப்பட்ட ஆளுநர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

ஆளுநர், நம்ம எச். ராஜாவைப் போல, மிகவும் துணிச்சலாக ஒரு சார்பு மக்களின் இனவுணர்வுக் கருத்துக்களை கொச்சைப் படுத்தி பேசி வருகிறவர் என்று சொல்லப் படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,795. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.