Show all

தம்பி அதிபரானதால்- பதவியேற்றார் அண்ணன் மகிந்த ராஜபக்சேவும்! இலங்கை புதிய தலைமைஅமைச்சராக.

தம்பி அதிபரானதால்- இலங்கை தலைமைஅமைச்சர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகியதை அடுத்து- அடுத்த தலைமைஅமைச்சராக நியமிக்கப்பட்டு- இன்று பதவியேற்றுக்கொண்டார். அண்ணன் இராஜபக்சேவும்.

தமிழ் உறவால், ‘தம்பி பிரபாகரன்’ என்று கொண்டாடிய தமிழீழமும்- குடும்ப உறவால், இன்று தம்பி அதிபராக அண்ணன் தலைமைஅமைச்சராக கோலோட்சும் இலங்கையில் உள்ளமைந்து- இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் எப்படி அமையப்போகிறதோ என்று கவலையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறது உலகத்தமிழினம். 

05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் தம்பி, அறுபது அகவை கோத்தபய ராஜபக்சே பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் பதவி ஏற்றதைத் தொடர்ந்து- பெரும்பான்மை இருந்தபோதும், அதிபர் வேறுகட்சியாலும், தலைமைஅமைச்சர் வேறு கட்சியாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற நிலையில்- அதிபர்கட்சிக்கே ஆதரவு என்று பெரும்பான்மை மக்களின் புதிய தீர்ப்பை மதித்து தலைமைஅமைச்சர் ரனில் விக்ரமசிங்கே பதவி விலகவேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது. அதிபரும், அமைச்சரவையும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மகிந்த ராஜபக்சே கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தலைமைஅமைச்சர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கே நேற்று பதவி விலகினார். இதைத் தொடர்ந்து புதிய தலைமைஅமைச்சராக உடனடியாக தனது அண்ணன் மகிந்த ராஜபக்சேவை நியமித்தார் கோத்தபய ராஜபக்சே.

இந்நிலையில் புதிய தலைமைஅமைச்சர் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. கொழும்பில் உள்ள பாராளுமன்றத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், நாட்டின் புதிய தலைமைஅமைச்சராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார். அவருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார். 

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொதுத்தேர்தல் நடைபெறும் வரை, மகிந்த தலைமையிலான இடைக்கால அரசு, வழக்கமான அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும். இரனில் விக்கிரமசிங்கே எதிர்க்கட்சி தலைவராக இருக்க வேண்டும் என்ற விருப்பம் பல்வேறு தரப்பிலிருந்து முன்மொழியப்பட்டு வருகிறது. 

தமிழ் உறவால், ‘தம்பி பிரபாகரன்’ என்று கொண்டாடிய தமிழீழமும்- குடும்ப உறவால், இன்று தம்பி அதிபராக அண்ணன் தலைமைஅமைச்சராக கோலோட்சும் இலங்கையில் உள்ளமைந்து- இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் எப்படி அமையப்போகிறதோ என்று கவலையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறது உலகத்தமிழினம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,343.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.