Show all

சுப்பிரமணிய சாமி மோடிக்கு வேண்டுகோள்! இலங்கைக்கு பத்து மில்லியன் டாலரைத் தவணை முறையிலாவது கொடுத்திட

இன்று சிக்கலில் இருக்கும் இலங்கைக்கு உதவ- இந்தியா- சீனாவை முந்திக் கொள்ள வேண்டும் என்று பலதரப்பில் இருந்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு வலியுறுத்தல் தொடர்ந்து வருகிறது. சுப்பிரமணிய சாமியும் வழிமொழிகிறார்.

16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: பொருளாதார பாதிப்பு என்கிற கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது இலங்கை. ஈழத்தமிழர்களை அழித்தொழிக்க சிங்களப் பேரினவாதத்திற்கு ஒத்துழைத்திருந்த பல்வேறு நாடுகள் பொருளாதார பாதிப்பு என்கிற கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இலங்கையை மீட்க பாராமுகம் பேணுகின்றன.

இந்த அருமையான தருணத்தில் இலங்கையை மீட்டு நிரந்தர அடிமையாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறதா என்கிற ஆய்வை முன்னெடுத்து வருகிறது சீனா. 

இந்திய விடுதலையின் போது மன்னர் ஆட்சிப்பகுதியாக இருந்த காஷ்மீரை தங்களோடு இணைத்துக் கொள்வதில் இந்தியாவும் பாகிஸ்தானும் முனைந்த நிலையில், இந்தியா- அரசியல் அமைப்பில் 370 பிரிவைக் கொணர்ந்து காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கி காஷ்மீரை தன்னோடு இணைத்துக் கொண்டது வரலாறு.

அன்றுபோலஇன்று, அன்று காஷ்மீர் சிக்கலில் இந்தியா, பாகிஸ்தானை முந்திக் கொண்டது போல, இன்று சிக்கலில் இருக்கும் இலங்கைக்கு உதவ- இந்தியா, சீனாவை முந்திக் கொள்ள வேண்டும் என்று பலதரப்பில் இருந்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு வலியுறுத்தல் தொடர்ந்து வருகிறது. 

இந்த நிலையில்- பல்வேறு பன்னாட்டுக் கொள்கைகளில் மோடி அரசாங்கம் தோல்வியுற்றுள்ளதாகவும் அந்த நிலைமை இலங்கை விடையத்திலும் தொடர அனுமதிக்கக்கூடாது என பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். தனது கீச்சுப் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தென்கடலில் நட்பு நாடாக இந்தியா நீண்ட காலமாக தொடர வேண்டுமாக இருந்தால், தவணை அடிப்படையிலான 10 பில்லியன் டாலரை ராஜபக்ச அரசாங்கத்திற்கு இந்தியா வழங்க வேண்டும்.

இல்லையென்றால், சீனாவிற்கு மற்றுமொரு இளைய பங்காளர் கிடைக்கும் நிலை ஏற்படும் என சுப்பிரமணியன் சுவாமி இந்தியத் தலைமைஅமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,114. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.