Show all

ஆலையை மூட அதிகாரம் இல்லையா! மக்களைக் கொன்று குவிக்க அதிகாரம் உள்ள அரசுக்கு: உலகம்

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நூறாவது நாள் போராட்டம் தலைகீழாக மாற்றப் பட்டது. பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்ல போராட்டத்தை முன்னெடுத்த போது, ஆயிரக்கணக்கான காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தடியடி நடத்தினர். வரலாறுகாணாத வகையில் கண்மூடித்தனமாக போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 13 பேரகள்; உயிரிழந்துள்ளனர். 

மக்களைக் கொன்று குவிக்க  அதிகாரம் உள்ள அரசுக்கு ஆலையை மூட அதிகாரம் இல்லையா? 

அப்புறம் ஏன் ஆலை மூடும் முயற்சியை விட்டு விட்டு அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் முயற்சியல் களம் இறக்கியது எடப்பாடி அரசு.

ஆலையை மூடுவது என்பது அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே போடுகிற பச்சை மை கையெழுத்து. அவ்வளவுதானே? என்று உலகமே பழனிசாமியின் படுபாதகச் செயலைக் கண்டு விழி பிதுங்கி நிற்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,800.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.