Show all

பத்து இலட்சம் அமெரிக்க டாலர் பரிசு பெற்ற தினகருக்கு வாழ்த்துகள்! ஐக்கிய அமீரகத்தின் தமிழ்நாட்டுக் கட்டிட தொழிலாளி

தினகர் உரிய முறைகளில் முயன்று, வரிவிலக்கு பெற்று, தனது முதலீட்டை முழுமையாக வேளாண் நிலங்கள் வாங்குவதற்கும் அவர் கிராமத்தின் அரசுப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவிடவும் நமது வாழ்த்துகள்.

18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஐக்கிய அரபு அமீரகம் ஆயிரம் திர்காம் விலையுள்ள பரிசுச் சீட்டுக்கு ஒருவருக்கு பத்து இலட்சம் அமெரிக்க டாலர் பரிசு கிடைக்கும் வகையான பரிசுக் குலுக்கலைத் கடந்த இருப்பத்தி இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்த பத்து இலட்சம் அமெரிக்க டாலர் பணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் முழுமையான வரிவிலக்கும் அளிக்கிறது.

பரிசுத் தொகையான பத்து இலட்சம் அமெரிக்க டாலர் என்பது இன்றைய நிலையில் இந்தியாவின் ரூபாய் ஏழு கோடியே நாற்பத்து ஐந்து இலட்சத்து பத்தாயிரத்திற்கு சமம். அந்தப் பரிசுச் சீட்டின்; விலை ஆயிரம் திர்காம் என்பது இன்றைய நிலையில் இந்தியாவின் ரூபாய் இருபதாயிரத்து இருநூற்று தொன்னூறுக்குச் சமம்.

ஐக்கிய அமீரகத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினகர் என்பவருக்கு இந்த ஐக்கிய அரபு அமீரக பரிசு குலுக்கலில் இந்தப் பத்து இலட்சம் அமெரிக்க டாலர் பரிசு  கிடைத்துள்ளது. 

இந்த பரிசுத் தொகையை வைத்து தனது கிராமத்தில் வேளாண் நிலம் வாங்க உள்ளததாகவும் அங்குள்ள பள்ளிக்கு உதவ உள்ளதாகவும் தினகர் தெரிவித்துள்ளார்.

தினகர் முதல் முறையாக நாளது 10,மார்கழி (25.12.2021) அன்று இந்தப் பரிசுச்சீட்டை இயங்கலையில் வாங்கி உள்ளார். அந்தச் சீட்டுக்கு பத்து இலட்சம் டாலர் பரிசு கிடைத்துள்ளது. 

தான் முதன் முறையாக வாங்கிய பரிசுச் சீட்டுக்கே பரிசு கிடைத்திருப்பது தனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது என்றும், இந்த பரிசுத் தொகையை வைத்து தனது கிராமத்தில் வேளாண் நிலம் வாங்க உள்ளததாகவும் அங்குள்ள பள்ளிக்கு உதவ உள்ளதாகவும் தினகர் தெரிவித்துள்ளார்.

சில அடிப்படைகளில் வெளிநாட்டு வருமானத்திற்கு இந்தியாவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. தினகருக்கு கிடைத்துள்ள வருமானம் பரிசுச்சீட்டில் என்பதால் முப்பது விழுக்காடு வரி விதிக்கப்பெற வாய்ப்பு இருக்கிறது. தினகர் உரிய முறைகளில் முயன்று, வரிவிலக்கு பெற்று, தனது முதலீட்டை முழுமையாக வேளாண் நிலங்கள் வாங்குவதற்கும் அவர் கிராமத்தின் அரசுப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவிடவும் நமது வாழ்த்துகள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,116.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.