Show all

பதஞ்சலியில் விற்பனைக்கு வருமா! அமெரிக்க வணிகநிறுவனக் கடையில் மாட்டுச் சாண வறட்டி விற்பனை.

இந்தியாவில் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் இயற்கை சார்ந்த பொருட்களைச் சந்தைப்படுத்துவதில் முன்னணியில் இருக்கிறது. தற்போது, அமெரிக்க வணிகநிறுவனக் கடையில் மாட்டுச் சாண வறட்டி விற்பனைக்கு வந்த நிலையில், பதஞ்சலியில் மதச்சடங்குகளுக்கு பயன்படும் இந்த மாட்டுச் சாண வறட்டி விற்பனைக்கு வருமா? என்று சிலர் தங்கள் ஆர்வத்தை பதிவிட்டு வருகின்றார்கள்.  

04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவில் உள்ள வணிகநிறுவனக் கடை ஒன்றில் மாட்டுச்சாண வறட்டி விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வறட்டி ரூ214 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு இயங்கலையில் மாட்டுச் சாண வறட்டி விற்பனைக்கு வந்தது குறித்து பலர் பேசினர். ஒரு காலத்தில் இலவசமாகக் கிடைத்த வறட்டி இன்று அரிய பொருளாகி அதிகவிலையில் விற்பனையாக்கப்படுவதாகப் பலர் விவாதித்தனர்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஒரு கடையில் 10 மாட்டுச் சாண வறட்டி 2.99 டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ214க்கு விற்பனைக்கு வந்துள்ளதாக கீச்சுவில் சமர் ஹலான்கர் என்பவர் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் அந்தப் பதிவில், இப்பொழுது என் கேள்வி இது நாட்டு மாட்டுச் சாணமா? அல்லது அமெரிக்க மாட்டுச் சாணமா என்பதே என்று ஒரு கேள்வியை ஐயமாகக் கேட்டுள்ளார்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,342.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.