Show all

புலனச் செயலியைத் தொடர வேண்டுமானல், செல்பேசியையே மாற்ற வேண்டும்! எந்த மாதிரியான செல்பேசிகளை

அடுத்த மாதத்தில் இருந்து பழைய மாதிரி செல்பேசிகளில் புலனச் செயலி (வாட்ஸ்அப்) வேலைசெய்யாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

05,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பழைய பதிப்புகளை இனி புலனம் ஆதரிக்காது. அந்த வகைப் பேசிகளில் புலனச்சேவை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சமூக ஊடக யுகத்தில் புலனம் அனைவரும் எளிதாக அணுகும் ஒரு செயலியாக பேரறிமுகமாக உள்ளது. ஆனால், இன்னும் 10 நாட்களில் சில பேசிகளில் புலனம் வேலை செய்யாதாம்.

ஆண்ட்ராய்டு ஓஎஸ் 4.1 மற்றும் அதற்கு மேல் ஆதரிக்கும் மிடுக்குப்பேசி உள்ளவர்கள் மற்றும் ஐஓஎஸ் 10 மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே புலனத்தைப் பயன்படுத்த முடியும் என்பது அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல் ஆகும்.

முகநூலுக்குச் சொந்தமான சேதிச் செயலியான புலனம் இன்னும் 10 நாட்களில் பல மிடுக்குப்பேசிகளில் வேலை செய்வதை நிறுத்திவிடும் என்று அறிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டின் பழைய பதிப்புகளை இனி புலனம் ஆதரிக்காது என்று நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஓஎஸ் 4.1 மற்றும் அதற்கு மேல் ஆதரிக்கும் மிடுக்குப்பேசி உள்ளவர்கள் மற்றும் ஐஓஎஸ் 10 மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே புலனச் செயலியைப் பயன்படுத்த முடியும்.

அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களும் தங்கள் பேசியின் அமைப்பு பகுதியை அணுகுவதன் மூலம் அவர்கள் பயன்படுத்தும் மென்பொருளின் பதிப்பைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,044.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.