Show all

இந்தியாவுடன் வணிகத்திற்கு தடைபோட்ட தாலிபான்கள்!

ஆப்கானிஸ்தானின் பாட்டில் தாலிபான்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக ரஷ்யா, சீனா என பல்வேறு நாடுகளும் அறிவித்துள்ளன. அதேநேரம் இந்தியா இது குறித்து எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருக்கிறது. ஏனென்றால் இதற்கு முன் அங்கு இருந்த அஸ்ரப் கானி தலைமையிலான அரசுடன் நெருக்கமான ஒரு உறவையே இந்தியா கொண்டிருந்தது. 

03,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைபற்றிய பிறகு இந்தியா உடன் ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்து விதமான வணிகத்திற்கும் தாலிபான்கள் தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பை அளித்துள்ளதாகவும் அவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அங்கு இன்னும் அமைதியான ஒரு சூழல் ஏற்படவில்லை. 

ஆப்கானிஸ்தானின் பாட்டில் தாலிபான்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக ரஷ்யா, சீனா என பல்வேறு நாடுகளும் அறிவித்துள்ளன. அதேநேரம் இந்தியா இது குறித்து எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருக்கிறது. ஏனென்றால் இதற்கு முன் அங்கு இருந்த அஸ்ரப் கானி தலைமையிலான அரசுடன் நெருக்கமான ஒரு உறவையே இந்தியா கொண்டிருந்தது. 

இரண்டு பக்கமும் கொள்கை மாறுபாடு உள்ள சூழலில்- ஏற்றுமதி, இறக்குமதி என இந்தியா உடனான அனைத்து விதமான வணிகத்திற்கும் தாலிபான்கள் தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு இயக்குநர் முனைவர் அஜய் சகாய் கூறுகையில், ஆப்கானிஸ்தானின் நிலை குறித்து நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் சரக்குகள் பாகிஸ்தான் வழியாக வந்து சேரும். ஆனால், இப்போது பாகிஸ்தான் பாதைக்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளதால், இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றார். 

கடந்த காலங்களில் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே இருந்த வணிக தொடர்பு குறித்துப் பேசிய அவர், ஆப்கானிஸ்தான் நாட்டுடன் அதிகளவில் வணிகம் செய்யும் ஒரு நாடாக நாம் இருந்தோம். நடப்பு ஆண்டில் சுமார் 835 மில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகளை ஆப்கனுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம். அதேபோல சுமார் 510 மில்லியன் டாலர் மதிப்புள்ள சரக்குகளை இறக்குமதி செய்துள்ளோம். 

சர்க்கரை, மருந்துகள், ஆடை, தேநீர், காபி போன்றவற்றை நாம் ஏற்றுமதி செய்கிறோம். அதேபோல அங்கிருந்து உலர் பழங்களை நாம் அதிகளவில் இறக்குமதி செய்கிறோம். சொல்லப்போனால், இந்தியாவுக்குத் தேவைப்படும் உலர் பழங்களில் சுமார் 85விழுக்காடு ஆப்கானிஸ்தானில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. 

இந்தநிலையில், உலர் பொருட்களின் விலை வரும் காலங்களில் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். வணிகத்தைத் தாண்டியும், ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்குக் கணிசமான முதலீடுகளும் உள்ளன. ஆப்கானிஸ்தானில் சுமார் 3 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளோம், ஆப்கானிஸ்தானில் 400-க்கும் மேற்பட்ட திட்டங்களில் இந்தியா முதலீடு செய்துள்ளது. இந்தத் திட்டங்களின் நிலை என்ன என்பது குறித்தும் இன்னும் தெரியவில்லை. ஆப்கானிஸ்தானில் நிலைமை சீரான பின்னரே என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரிய வரும். என்று அவர் குறிப்பிட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.