Show all

தற்போது ஏறுமுகத்தில்! குறளிச்செலாவணிச் (கிரிப்டோகரண்சி) சந்தை

பன்னாட்டு நாணய சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் காரணத்தால் அதிகப்படியான முதலீடுகள் குறளி (கிரிப்டோ) சந்தை பக்கம் திரும்பியுள்ளதாக குறளிச் செலாவணிச் சந்தையின் ஏறுமுகத்திற்குக் காரணம் சொல்லப்படுகிறது.

11,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: பிட்காசு உட்பட பல முதன்மைக் குறளிச்செலாவணிகளின் (கிரிப்டோகரன்சி) மதிப்பு உயரத் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு மட்டும் 6.04 விழுக்காடு அதிகரித்து 51,227.96 டாலராக உயர்ந்துள்ளது.

பன்னாட்டு நாணய சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் காரணத்தால் அதிகப்படியான முதலீடுகள் குறளி (கிரிப்டோ) சந்தை பக்கம் திரும்பியுள்ளது என்று குறளிச்செலாவணிகளின் (கிரிப்டோகரன்சி) மதிப்பு உயர்தலுக்கான காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் குறளிச்செலாவணி முதலீட்டாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் சிறிய மதிப்புகொண்ட குறளிக் காசுகளில் முதலீடு செய்து ஆதாயம் பார்க்கி;ன்றனர்.

சிறு முதலீட்டாளர்கள் ஆதாயம் பார்ப்பதற்கு அருமையான வழி- கொஞ்சம் கொஞ்சமாக தொடர் முதலீடு செய்வது என்று ஆதாயம் பார்த்த அனுபவத்தினர் தெரிவிக்கின்றனர். நன்றாக விலை குறையும் போது- எடுத்துக்காட்டாக அறுபது ரூபாய்க்கு விற்கும் குறளிக்காசு ஒன்றே ஒன்றுதான் வாங்கவேண்டும் விலை குறைய குறைய ஒவ்வொரு காசாக வாங்கவேண்டும். நாம் வாங்கிய விலைக்கு ஒரு ஐந்து ரூபாய் கூடுதலாகக் கிடைத்தாலும் விற்றுவிட வேண்டும். 

இப்படி 'விலை குறைந்த பல்வேறு குறளிக்காசுகளில் முதலீடு செய்தல்- மிகக் குறைந்த ஆதாயம் கிடைத்தாலும் அந்தக் காசை விற்றுவிடுதல்' குறளிச்சந்தையில் வெற்றி பெறுவதற்கான வாய்பாடு என்றும் ஆதாயம் பார்த்த அனுபவத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் முன்னணி குறளிச்செலாவணித் தளமாக விளங்கும் வசிரக்ஸ் நிறுவனம் குறைந்த முதலீட்டில் குறளிச்செலாவணிச் சந்தையில் ஈடுபடுவோருக்கு நிறைய வகை குறளிக் காசுகளைச் சந்தைப்படுத்துகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,109.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.