Show all

இனி பிட்காசுவில்தான் சம்பளம்! எண்ணிமச் செலாவணியான பிட்காசுவை அங்கீகரிக்கும் அரசு

அரசு ஊழியர்களுக்கு எண்ணிமச்செலாவணியான பிட்காசுவில் சம்பளம் வழங்க திட்டமிட்டுள்ளதாக மியாமி நகரத்தந்தை தெரிவித்துள்ளார்.

01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: அமெரிக்காவின் மியாமி நகரத்தின் நகரத்தந்தை பிரான்சிஸ் சூவாரீஸ் எண்ணிமச்செலாவணியின் வணிக மையாமாக அந்த நகரத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே மியாமியின் அரசு ஊழியர்களுக்கு பிட்காசுவின் மூலம் ஊதியம் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.

அதேபோல மியாமி நகர குடிமக்களும் பிட்காசுவைப் பயன்படுத்தி நகர வரிகள் செலுத்தவும் ஏற்பாடுகளை செய்வதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் எனவும் அந்நகரத்தின் நகரத்தந்தை பிரான்சிஸ் சூவாரீஸ் கூறியுள்ளார்.

பிட்காசுவில் முதலீடுகளை செய்ய மியாமி அரசு முன்பே திட்டமிட்டிருந்தது, ஆனால் புளோரிடோவின் உள்ளூர் அரசு வரம்புகள் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. அதனால் இவ்விரண்டு உள்ளூர் அரசாங்கங்களும் மறைமுகமான எதிர்ப்புகளுடனே செயல்பட்டு வந்தன. இந்நிலையில்தான் மியாமியின் நகரத்தந்தை இந்த அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எண்ணிமச்செலாவணியின் தீவிர ஆதரவாளர்களான எலான் மஸ்க் மற்றும் எல் சால்வடோர் நாட்டின் அதிபர் நயீப் புகலேவுடன் இணைந்து வலுவான பிட்காசு சமூகத்தை உருவாக்கப் போவதாகவும் பிரான்சிஸ் கூறியுள்ளார். அண்மையில் 'பிட்காசு பயனற்றது' என ஜேபி மார்கன் நிறுவனத்தின் தலைவரான ஜேமி டிமோன் கூறியதை பிரின்ஸ் கடுமையாக சாடினார்.

நாங்கள் பிட்காசு குறித்து கருத்து வெளியிட்டதிலிருந்தே பிட்காசுவின் விலையானது கணிசமாக உயர்ந்துள்ளது எனவும், தென் அமெரிக்க, மத்திய ஆசிய, அமெரிக்க நாடுகளும் எண்ணிமச் செலாவணிகளுக்கு ஆதரவாக இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,040.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.