Show all

புளோரிடா! குறளிச்செலாவணியைத் கொண்டாட களமிறங்கியுள்ள இன்னுமொரு நாடு

குறளிச்செலாவணிக்கு தொடர்ந்து ஆதரவு பெருகிக் கொண்டே வரும்நிலையில் சராசரியாக அனைத்து குறளிச்செலாவணிகள் மதிப்பு 15 விழுக்காடு வரை கூடியுள்ளது. 
 
11,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: குறளிச்செலாவணிக்கு (கிரிப்டோகரன்சி) தொடர்ந்து ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது. 

அமெரிக்கா, ரஷ்யா, மலேசியா என பல நாடுகளும் குறளிச்செலாவணியை சட்டப்பாடு ஆக்குவது குறித்து ஆலோசித்து வருகின்றன.

இந்த நிலையில் ப்ளோரிடா ஆளுநர் வணிகங்களில் இருந்து செலுத்தப்படும் வரியினை குறளியாக ஏற்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த குறளிச்செலாவணிகளில் அதிக ஆர்வம் காட்டாத நிலையில், தற்போது பைடன் அரசு இதில் ஆர்வம் காட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புளோரிடா ஆளுநரின் இந்த அறிவிப்பானது குறளிச்செலாவணி முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தலாம். முதலீடுகளை செய்ய தூண்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புளோரிடா குறளிச்செலாவணிக்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில், மியாமின் மேயரான பிரான்சிஸ் சுரேஸ், பணவீக்கத்திற்கு எதிராக தனது சம்பளத்தில் ஒரு பகுதியை பிட்காசுவில் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது மட்டும் அல்ல, அமெரிக்காவின் பிற மாநிலங்களும் குறளிச்செலாவணியை ஏற்றுக் கொள்ள தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

பன்னாட்டு அளவில் நிலவி வரும் அரசியல் பதட்டங்களுக்கு நடுவே, குறளிச்செலாவணிகள் முதன்மை முதலீடுகளாக மாறி வருகின்றன. குறளிச்செலாவணி சந்தையில் முதன்மையாக இருந்து வரும் பிட்காசு மதிப்பு தற்போது 2.24விழுக்;காடு அதிகரித்து, 42,992.42 டாலராக காணப்படுகின்றது.

எத்தரியத்தின் மதிப்பானது தற்போது 3.31விழுக்காடு அதிகரித்து, 3050.63 டாலர்களாக காணப்படுகிறது. 

கார்டானோ மதிப்பானது 16.96 விழுக்காடு அதிகரித்து, 1.15 டாலராக காணப்படுகிறது. 

எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 1.32விழுக்காடு அதிகரித்து, 0.835901 டாலராக காணப்படுகிறது. 

லிட்காசுவின் மதிப்பானது 2.49 விழுக்காடு அதிகரித்து, 122.38 டாலராக காணப்படுகிறது. 

யுனிஸ்வாப் மதிப்பானது 5.32 விழுக்காடு அதிகரித்து, 10.36 டாலராக காணப்படுகிறது. 

போல்கடோட் மதிப்பானது தற்போது 2.26விழுக்காடு அதிகரித்து, 20.74 டாலராக காணப்படுகிறது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,198.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.