Show all

பிரிக்ஸ் நாடுகளை மோடி தவறாக வழி நடத்துவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டு

பயங்கரவாத பிரச்சனையில் பிரிக்ஸ் நாடுகளைப் பிரதமர் நரேந்திர மோடி தவறாக வழி நடத்துவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. கோவாவில் பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்தின் தாயகமாக பாகிஸ்தான் விளங்குவதாக விமர்சித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ், பயங்கரவாத விவகாரத்தில் பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளை பிரதமர் மோடி தவறாக வழி நடத்தி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். பிரிக்ஸ், பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளுடன் இணைந்து பாகிஸ்தானும் பயங்கரவாதத்தை கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் மண்ணில் இந்தியா ஆதரவுடன் நடத்தப்படும் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்து போராட பாகிஸ்தான் உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுயநிர்ணய உரிமை கோரும் காஷ்மீர் மக்கள் நடத்தும் போராட்டத்தை பயங்கரவாதம் என முத்திரை குத்தும் இந்தியாவுக்கு, பயங்கரவாத எதிர்ப்பு குறித்து பேசக் கூட தார்மீக உரிமை உரிமை இல்லை என்றும் சர்தாஜ் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.