Show all

43 தமிழ்நாட்டு இந்திய ஒன்றிய மீனவர்களுக்கு 11நாட்கள் சிறை! தொடரும் இலங்கை கடற்படையினர் அடாவடி வரிசையில்

தமிழ்நாட்டு இந்திய ஒன்றிய மீனவர்களுக்கு, தமிழ்நாட்டுத் தென்கடலில் எல்லை தாண்டியதாகக் குற்றஞ்சாட்டி தொல்லை கொடுப்பது இலங்கை கடற்படையினரின் வாடிக்கையான முன்னெடுப்பாக தொடர்ந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது அடாவடிப்படுத்தப்பட்டுள்ளது: நாற்பத்தி மூவருக்கு சிறை.

05,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 43 தமிழ்நாட்டு இந்திய ஒன்றிய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டு தென்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 தமிழ்நாட்டு இந்திய ஒன்றிய மீனவர்களை, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். 

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேசுவரத்தை சேர்ந்த 43 மீனவர்களுக்கும் 16,மார்கழி (டிசம்பர் 31) வரை சிறைக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஊர்காவற்துறை அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் கஜநிதிபாலன் பிறப்பித்ததாகக் தெரிவிக்கப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,103.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.