Show all

விமான மாதிரியை உருவாக்கியிருக்கிறார் ஓர் உழவர்! விமானியாகும் கனவு நிறைவேறாதவராம்

14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விமானியாகும் கனவு பறிபோனாலும் அதை வேறு விதத்தில் நிறைவேற்றிக்கொண்டார் சீனாவைச் சேர்ந்த உழவர் ஒருவர். இப்போது சொந்தமாகவே ஒரு விமானத்தை உருவாக்கியுள்ளார் அவர். ஏர்பஸ் ஏ320 ரக விமானத்தை முன்மாதிரியாகக் கொண்ட இவ்விமானம் தற்போது வயல்கள் சூழ சிறு ஓடுபாதையில் நிற்கிறது. பள்ளிப்படிப்பை முடிக்க இயலாத சூயுவே வெங்காயம், பூண்டு ஆகியவற்றைப் பயிரிட்டு வருகிறார். அவ்வப்போது அருகில் உள்ள சிறு தொழிற்சாலையில் பற்றவைப்புப் பணியிலும் ஈடுபட்டார். வாழ்க்கையில் விமானத்தை இயக்கும் ஆசை நிறைவேறாமலேயே போய்விடக்கூடும் என்ற வருத்தம் அவருக்கு ஏற்பட்டது.

இதனால் சொந்தமாக ஒரு விமானத்தைத் தாமாகவே உருவாக்க முடிவெடுத்தார். 60 டன் இரும்பைப் பயன்படுத்திச் சுமார்; விமான மாதிரியை அவர் உருவாக்கினார். தொழிலாளர்கள் சிலர் அவருக்கு உதவியாக இருந்தனர். விமானத்தினுள் வழக்கமாகப் பொருத்தப்படும் 156 இருக்கைகளுக்குப் பதிலாக 36 பேர் அமரும் முதல் வகுப்பு இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த விமானத்தை உணவகமாக மாற்ற சூயுவே திட்டமிட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,957.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.