Show all

இரண்டு நாட்களாக காரைப் பின்தொடர்ந்த 20000 தேனீக்கள்

 

     பிரிட்டனின் பெம்போர்க்ஷியர் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் கரோல் கோவர்த், வார விடுமுறையை கழிக்க வனப்பகுதிக்கு சென்றிருந்தார். அவரது காரின் உட்பகுதியில் ராணித்தேனீ ஒன்று சிக்கிக்கொண்டது. அதை அவர் கவனிக்காமல் வீடு திரும்பியுள்ளார்.தேனீக்களுக்கே உரித்தான நுகர்வு தன்மையால், காரில் ராணித்தேனீ இருப்பதை அறிந்த 20000 தேனீக்கள், கோவர்த்தின் காரை 2 நாட்கள் பின்தொடர்ந்துள்ளன.

பின் தேனீ நல ஆர்வலரின் உதவியுடன் ராணித்தேனீ உள்ளிட்ட தேனீக்களை பத்திரமாக மீட்டு மீண்டும் வனப்பகுதிக்கே கொண்டு விட்டுள்ளார் கோவர்த்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.