Show all

எழுத்துப் பிழையுடன் பதில் எழுதிய 10 வயது முஸ்லிம் மாணவரிடம் இங்கிலாந்து போலீஸ் விசாரணை

பாடப் புத்தக கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பிழையுடன் பதில் எழுதிய 10 வயது முஸ்லிம் மாணவரிடம் இங்கிலாந்து போலீஸ் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆங்கில பாடப் புத்தகத்தில்,

‘நீ எங்க வசிக்கிறாய்?’ என்ற கேள்விக்கு வநசசயஉநன hழரளந (மாடிவீடு) என்பதற்கு பதிலாக வநசசழசளைவ hழரளந (தீவிரவாதி வீடு) என்று எழுதியதால் இந்தப் பிரச்சினை உருவானது.

 

இங்கிலாந்தின் வடகிழக்கைச் சேர்ந்த அந்த முஸ்லிம் மாணவர் லான்க் ஷ்யிரில் குடும்பத்தோடு வசிக்கிறார். பாடப் புத்தகத்தில் சிறுவன் எழுதி இருந்த பதிலை கண்ட பள்ளி ஆசிரியை உடனடியாக சிறுவனை விசாரிக்க வேண்டும் என போலீஸில் புகார் அளித்தார்.

 

இதனைத் தொடர்ந்து சிறுவனிடம் போலீஸார் விசாரணை நடத்தியதோடு அல்லாமல், அவரது வீட்டில் முழு சோதனையிலும் ஈடுபட்டனர். பெற்றோரின் லேப்டாப் கைப்பற்றப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

 

ஆனால், அவர்களது வீட்டில் சந்தேகத்துக்கிடமான எந்த அம்சமும் இடம் பெறவில்லை.

 

இறுதியில் மாணவர் செய்த எழுத்துப் பிழையை ஆசிரியை தவறாக புரிந்துகொண்டதாகவும், இதில் நடவடிக்கைக்கு வேலையில்லை என்றும் லான்கஷயிர் போலீஸார் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.