Show all

தம்பட விரும்பிகள் கொண்டாட்டத்திற்கு! 44 பெரும்படத்துணுக்கு முன்பக்க படக்கருவியுடன் செல்பேசியை வெளியிடுகிறது விவோ

விவோ ஒய்75 பேசியின் விலை ரூ.25,999 ஆகும். இந்த மிடுக்குப்பேசிக்கு 19 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடிக்குப் பிறகு, 20,999 ரூபாய்க்கு இந்தப் பேசியை வாங்கலாம். 

08,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: மிடுக்குப்பேசி தயாரிப்பு நிறுவனமான விவோ- இந்தியாவில் புதிய ஒய் வரிசை மிடுக்குப்பேசியான விவோ ஒய்75 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. விவோ ஒய்75 மிடுக்குப்பேசியில் 44 பெரும்படத்துணுக்கு (44மெகாபிக்சல்) தம்பட கருவி மற்றும் 50 பெரும்படத்துணுக்கு இரவுநேர பின்பக்க படக்கருவியும் உள்ளன. விவோவின் இந்தப் புதிய பேசி மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட் கொண்ட சிற்றெடை கொண்ட வடிவமைப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ ஒய்75 பேசியின் விலை ரூ.25,999 ஆகும். 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புவாய்ப்பும் கொண்ட இந்த பேசியில் 19 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடிக்குப் பிறகு, 20,999 ரூபாய்க்கு இந்த பேசியை வாங்கலாம். 

அதேபோல் விவோ ஒய்75 மிடுக்குப்பேசிக்கு ரூ.1500 வரை, ஐசிஐசிஐ வங்கி மற்றும் இந்திய மாநில வங்கி சலுகையும் உள்ளது. 

விவோ ஒய்75 மிடுக்குப்பேசியல் 6.44 அங்குல முழு எச்டி பிளஸ் அமோல்ட் திரை உள்ளது. 4050எம்ஏஎச் மின்கலம் கொடுக்கப்பட்டுள்ளது. இது 44 வாட் வேகமின்னேற்றத்தை ஆதரிக்கிறது. அதன் உதவியுடன், பேசியை 30 மணித்துளிகளில் 65 விழுக்காடு வரை மின்னேற்றம் செய்ய முடியும். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,256.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.