Show all

எச்சரிக்கை! இது இயங்கலையில் விருப்பம் போல உலா வருகின்றவர்களுக்கு

இந்த வகைகளுக்கு எல்லாம் கூகுள் தேடுதலை முன்னெடுக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தல் இயங்கலை தொடர்பான வல்லுநர் பெருமக்களால் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இயங்கலையில் விருப்பம் போல உலா வருகின்றவர்கள் இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள்

02,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: தொட்டதற்கெல்லாம் தேடு கூகுளை என்று பலரும் இயல்பாக இணையத்தில் கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்தி வருகின்றார்கள்.

ஆனாலும் கூகுளில் தேடவே கூடாத சில விடையங்களை, துறை சார்ந்த அறிஞர்பெருமக்கள் அடிக்கடி தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.

உங்கள் வங்கியின் இயங்கலை வலைத்தளங்களை கூகுளில் தேடுவதைத் தவிர்க்கவும். இணையத்தில் சுழியம் குற்றங்கள்  அதிகரித்து வருவதால், வங்கியின் அதிகாரப்பாட்டு வலைத்தளம் போல் தோற்றமளிக்கும் போலி வலைத்தளத்தில் சிக்கி, உங்கள் தனிப்பட்ட விவரங்களை பதிவிட்டு விபத்தில் சிக்காதீர்கள்.

உங்களுக்கு தேவையான நிறுவனங்களின் வாடிக்கையாளர் களப்பணி எண்களை ஒருபோதும் கூகிளில் தேட வேண்டாம். மோசடி செய்பவர்கள், அசல் வாடிக்கையாளர் களப்பணி எண்கள் போன்ற போலி எண்களை வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

கூகுளில் மருந்துகள் அல்லது மருத்துவ அறிகுறிகளை ஒருபோதும் தேட வேண்டாம். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, மருத்துவரை அணுகுவதே சிறந்தது. மருத்துவ அறிகுறிகள் அனைத்தும் கூகுளில் துல்லியமாக இருக்காது என்பதை நினைவில் வையுங்கள். இயங்கலையில் மருந்துகளை, மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கேட்பை மேற்கொள்ள வேண்டாம். 

இலவசமாகக் கிடைக்கும் குறுவி தடுப்புகளை (ஆன்டி-வைரஸ்) பதிவிறக்கம் செய்ய முயலவேண்டாம். இதிலும் ஆபத்து இருப்பதாக துறை சார்ந்த வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,041.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.