Show all

திருமுருகன் காந்தி கைது: அடிப்படை உரிமைகளுக்கு எதிரான செயல்: கொதிக்கும் பிரபலங்கள்

மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பதற்குப் பல்வேறு பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் ராஜு முருகன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோரும் திருமுருகன் காந்தியின் கைது, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என கீச்சில்; கருத்து தெரிவித்துள்ளனர்.

     இலங்கைப் போரில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக மே 21ஆம் தேதி தடையை மீறி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த வழக்கில், மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்.

     இந்நிலையில் அவரை நேற்று தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்தது. இதற்கு ஸ்டாலின், வைகோ, சீமான், திருமாவளவன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

     அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. கீச்சிலும்; திருமுருகன் காந்திக்கு ஆதரவாக மக்கள் குரல் கொடுத்துவருகின்றனர்.

     இந்நிலையில் ஜோக்கர் பட இயக்குனர் ராஜு முருகன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு கீச்சுவில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இயக்குநர் ராஜு முருகன் பதிவிட்டுள்ள கீச்சில் தோழர் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது கருத்து சுதந்திரத்துக்கும் அரசியல் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரான செயல். கண்டனங்கள்! என தெரிவித்துள்ளார்.

     இதேபோல் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பதிவிட்டுள்ள கீPச்சில் மே17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன்காந்தி, டைசன், அருண்குமார் உள்ளிட்டவர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.