Show all

இந்திய தேசிய இராணுவத் தலைவி கோவிந்தம்மாள் மரணம்

வேலூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் கோவிந்தம்மாள், இந்திய தேசிய ராணுவத்தில், தலைவராக மலேசியாவில் பணியாற்றியவர். நேதாஜி இறந்த பிறகு, சொந்த ஊரான ஆம்பூருக்கு வந்து, கூலி வேலை செய்து பிழைத்து வந்தார். இந்நிலையில், 91 வயதான கோவிந்தம்மாள், நேற்று முன் தினம் மதியம், 3:00 மணிக்கு இறந்தார். அமைச்சர் வீரமணி, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராமன் உட்பட ஏராளமானோர், கோவிந்தம்மாள் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். விடுதலைப் போராட்ட தியாகி இறந்ததற்கான ஈமச்சடங்கு நிதியுதவி, 5,000 ரூபாயை, மாவட்ட ஆட்சித் தலைவர் ராமன் அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். நேற்று மாலை, 4:00 மணிக்கு, ஆம்பூர் சுடுகாட்டில் கோவிந்தம்மாள் உடல் அடக்கம் நடந்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.