Show all

எடப்பாடி-பன்னீர் நடத்தும் தவறான ஆட்சியைவிட, மோடி நடத்தும் தப்பான ஆட்சி ஆபத்தானது

02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அறியாமல் அறியாமையால் செய்த தவறு, கவனக்குறைவால் செய்யும் தவறு என தவறு என்பது மனித இயல்பு என்று சொல்வார்கள். எல்லா தவறுகளும் குற்றங்களல்ல. அறிந்தே செய்கிற தப்புதான் குற்றம் ஆகும்.

வாலி பெற்றால்தான் பிள்ளையா என்ற படத்தில் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்ற பாடலில், எம் எஸ் விஸ்வநாதன் இசையில், டிஎம்சௌந்திரராசன் குரலில் எம்ஜியார் அவர்களுக்காக ஒர் இனிய பாடலைத் தருகிறார்

தவறு என்பது தவறி செய்வது

தப்பு என்பது தெரிந்து செய்வது

தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்

தப்பு செய்தவன் வருந்தியாகணும்

எங்க வீட்டு பிள்ளை என்ற படத்தில் நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்ற பாடலில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், டிஎம்சௌந்திரராசன் குரலில் எம்ஜியாருக்காக பாடப் பட்ட பாடலில்

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்

அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்.

என்று வாலி கடுமையான எச்சரிக்கை தருகிறார்.

தமிழகத்தில் அவ்வப்போது தவறான ஆட்சி நடப்பதும், மக்கள்- ஆட்சி மாற்றத்தின் மூலம் சரி செய்வதும் வாடிக்கைதான்.

நடுவண் அரசில் அவ்வப்;போது தப்பான ஆட்சியாளர்கள் அரங்கேறி, அதிகாரத்தை தப்பாக செயல் படுத்துவார்கள்.

அந்தத் தப்புகளை பெரிய பெரிய போராட்டங்கள் மூலம் நாம் சரி செய்திருக்கிறோம்.

ஒன்று: ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.

இரண்டாவது: சல்லிக்; கட்டு ஆதரவுப் போராட்டம்.

மூன்றாவதாக ஒரு பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய தேவையை மோடி அரசு செயல் படுத்தி வருகிறது. அது: மோடிஅரசின், ஹிந்து, ஹிந்தி, ஹிந்துஸ்தான் அதிகாரமயமாக்கல்.

அந்தச் செயலாக்கத்திற்கு எதிரான போராட்டத்தை விரைவில் தமிழர்கள் முன்னெடுப்பார்கள் என்பதற்கான வெளிசசக் கீற்றாக காமராசர் அரங்கத்தில் நேற்று நடந்து முடிந்த வைரமுத்துவின் தமிழாற்றுப்படை அரங்கேற்றம் தெரிகிறது.

தயாராகுங்கள் தமிழர்களே; களத்தில் சந்திப்போம்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,698

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.