Show all

மாத வருமானம் ரூ8300 மேல் உள்ளவர்களுக்கு குடும்ப அட்டைப் பொருட்கள் கிடையாதாம்

குடும்ப அட்டைக்குப் பொருட்கள் பெறுவதற்கு கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு தான்தோன்றித் தனமாக பல்வேறு கடுமையான விதிமுறைகளை நடுவண் அரசு வகுத்துள்ளது.

அதை அனைத்து மாநில அரசுகளும் அமல்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக அரசும் நேற்று ஒரு அரசாணையை பிறப்பித்துள்ளது.

வரி செலுத்தினால் குடும்ப அட்டைக்குப் பொருட்கள்; கிடையாது குடும்பத்தில் ஒருவர் வருமான வரி செலுத்தினால் குடும்ப அட்டைக்குப் பொருட்கள் பெற முடியாது.

தொழில்வரி செலுத்துபவர்களை கொண்ட குடும்பங்கள். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள பெரு விவசாயிகள். மத்திய மற்றும் மாநில அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், மத்திய-மாநில தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்களகுக்கு கிடையாது.

குளிரூட்டு வசதியோ, மூன்று அறைகளோ வீட்டில் இருந்தால் கிடையாது

மாதம் ரூ 8,300க்கு அதிகமாக வருமானம் உள்ள குடும்ப அட்டைகள். பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்களுக்கு குடும்ப அட்டைக்குப் பொருட்கள்; கிடையாது என்றும், அவர்கள் புதிதாக குடும்ப அட்டையும் பெற முடியாது என்றும் தமிழக அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

குடிசை பகுதியில் வசிப்பவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், வீடு இல்லாதவர்கள், வேலைத்திறன் குறைந்த குப்பை எடுப்பவர்கள், திறனில்லா தொழிலாளிகள் மற்றும் இதர அரசு நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் ஏழை பயனாளிகள். கிராமப்பகுதியில் அனைத்து அந்தியோதயா அன்னயோஜனா குடும்பங்கள். அன்னபூர்ணா திட்ட பயனாளிகளை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள்.

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ள அனைத்து வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள். முதியோர் உதவித்தொகை திட்ட பயனாளிகள் போன்ற இதர நலத்திட்ட பயனாளிகள். விதவை மற்றும் திருமணமாகாத பெண்மணியை குடும்ப தலைவராக கொண்ட அனைத்து குடும்பங்கள். 40 விழுக்காட்டிற்கு மிகுதியாக உடல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகளைக் குடும்ப தலைவர்களாக கொண்ட குடும்பங்கள். விவசாய கூலித் தொழிலாளர்கள் விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை குடும்பங்கள் ஆகியோருக்கு குடும்ப அட்டைக்குப் பொருட்கள் வழங்கப்படும் என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அரசாணை பெரும் அதிர்ச்சி அலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று மக்கள் கொதித்துப் போய் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

மாதம் ரூ 8,300; கூட சம்பாதிக்க கூடாதா? ஏண்டா லூசுப் பசங்களா? இப்ப கிடைக்கிற குடுப்ப அட்டைப் பொருள்களில் குடும்பம் நடத்துகிறவர்கள் தாண்டா 90 விழுக்காடு மக்கள். நீங்க மட்டும் கோடிகளில் ஊழல் பண்ணுவீங்க நாங்க மாதம் ரூ 8,300;ல் பிழைப்பு நடத்தனுமா! என்ற அதிர்ச்சியில் மக்கள் உறைந்து போயுள்ளார்கள்.

வாய் பேசுவதற்கு வகையில்லாத, வக்கற்றவர்களுக்கு மட்டும் வாக்காளர் அட்டையும், குடும்ப அட்டையும்.

மற்றவர்களுக் கெல்லாம் ஆதார் அட்டை மட்டும்தாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.